செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் மனைவியை கொன்று உடலை குக்கரில் சமைத்த கணவர்

அவுஸ்ரேலியா நாட்டில் மனைவியை கொலை செய்த கணவன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள குபான்ஸ் லேண்ட் நகரை சேர்ந்தவர் மார்கஸ் வோல்க் (27). இவரது மனைவி மயாங் பிரசெப்யோ (23). இவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர். மார்கஸ் கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே மார்கசுக்கு குறைவான வருமானம் கிடைத்ததால் இருவரும் விபசார தொழிலில் ஈடுபட்டனர். இதனால் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ...

Read More »

உணவகம் முன்பு அவசரமாக உலங்கு வானூர்தியை தரை இறக்கிய விமானி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரெனஉலங்கு வானூர்தியை  தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தியை  துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார். இச்சம்பவம் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் நடந்தது. உணவக வளாகத்தில் திடீரென உலங்கு வானூர்தி ...

Read More »

சவேந்திரசில்வாவை நீதிமன்றிற்கு அழைக்க மறுப்பு!

இனஅழிப்பு போர்க்குற்றவாளிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக முல்லைதீவு நீதிமன்றிற்கு அழைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையினை முல்லைதீவு நீதிபதி நிராகரித்துள்ளார். இறுதி யுத்த காலத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பினில் வவுனியா மேல்நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான ஆரம்ப கட்ட விசாரணைகள் முல்லைதீவு நீதிமன்றினில் நடைபெற்றுவருகின்றது. சுரணடைந்தவர்கள் தொடர்பாக அப்போது அங்கு கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவிற்கே தெரியுமென கூறப்பட்டிருந்த நிலையினில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடும் சட்டத்தரணி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக இணைந்து கொள்ளவும் நீதிமன்றினில் ஆஜராக்கவும் கேட்டிருந்தார்.அதனையே இன்று முல்லைதீவ ...

Read More »

பப்புவா நியு கினி சிறைச்சாலையில் 17 கைதிகள் சுட்டுக்கொலை!

பப்புவா நியு கினியின் லை (Lae) பகுதியில் உள்ள பிமோ (Buimo) என்ற சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 17 கைதிகள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது சிறைச்சாலையில் இருந்த சுமார் 57 சிறைக்கைதிகள் தப்பியோடியதாகவும் அவர்களில் மூவர் காவல் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. தப்பியோடிய சிறைக்கைதிகள் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய சிறைக்கைதிகள் ...

Read More »

இறந்த குழந்தைக்கு உயிரூட்டவும் ஒரு தாயால்தான் முடியும்!

ஒரு தாயால் பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மட்டுமல்ல.., இறந்த குழந்தைக்கு உயிரூட்டவும் முடியும் என்பதை நிரூபிக்கும் நெகிழ்ச்சி  காணொளியை அன்னையர் தினமான இன்று (14) வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!. நவீனகால கண்டுபிடிப்புகளால் மருத்துவத் துறையில் சில ‘மிராக்கில்’ (அற்புதம்) ஏற்படுவதாக டாக்டர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால், டாக்டர்களே பிணம் என்று கைவிட்ட குழந்தையையும் உயிர் பிழைக்க வைக்கக்கூடிய அற்புதம் ஒரு பெண்ணின் பொறுமை மற்றும் தாயன்பால்தான் நிகழ முடியும் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்!.

ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், வீடு தேடும் போதும் வேலை தேடும் போதும் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் நம்பிப் பணம் கொடுக்கும் வீடுகளும் இல்லை, தேடிச்சென்ற வேலையும் உண்மையானதில்லை. வெளிநாட்டு மாணவர்கள், குறிப்பாக சீனாவிலிருந்த்து வந்தவர்கள், yeeyi.com எனும் ஒரு வலைத்தளத்தளத்தைப் பயன்படுத்துவதாக Monash detective Senior Constable Chris Duke கூறினார். இந்த வலைத்தளத்தினூடாக மெல்பேர்ண் நகர் மற்றும் Southbank போன்ற இடங்களில் மாணவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க அதிகமாகத் தேடுகிறார்கள். ஆனால், இந்த வலைத்தளத்தில் தமக்குப் பிடித்தமான ஒரு வீட்டைத் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் புதிதாகக் குடியேறியவர்கள் வேலையைப் பெறுவது எப்படி?

அவுஸ்ரேலியாவில் புதிதாகக் குடியேறியவர்கள் தமது முதலாவது வேலையைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். அவர்களுக்கான ஆலோசனையை வழங்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் இயங்கி வருகிறது. இத் தளத்தை திருமதி சுபி நந்திவர்மன் நடத்திவருகின்றார். http://stridez.com.au/

Read More »

வட கொரியா-அமெரிக்கா போர்: அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் ஏற்பட்டால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் Leonid Petrov ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். Leonid Petrov வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போரில் வடகொரியா மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும். வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் குடும்பத்துடன், சீனா, ரஷ்யா அல்லது தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படும். அதே சமயம் போருக்கு பிறகு நாட்டைச் மறுசீரமைக்க சுமார் 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். வடகொரியாவும், ...

Read More »

நகைச்சுவையான குவாண்டஸ் தலைமை அதிகாரி!

அவுஸ்ரேலியாவின் குவாண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜாய்ஸ் முகத்தில் அடையாளம் தெரியாத நபர் ’பை’ என்ற உணவுப்பொருளை தேய்த்தும், அவர் கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேற்கு அவுஸ்ரேலியாவின் தலைநகரான பெர்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவுஸ்ரேலியாவின் அரசு விமான நிறுவனமான குவாண்டஸ்-ன் தலைமை அதிகாரி ஜாய்ஸ் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக மேடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு பெரியவர், திடீரென தன் கையிலிருந்த ‘பை’ எனப்படும் உணவுப் பொருளை, ஜாய்ஸ்-ன் முகத்தில் வைத்து தேய்த்துவிட்டு, சாதாரணமாக ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு வீசா கட்டணம் அதிகரிக்க தீர்மானம்!

அவுஸ்ரேலியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 2017/18 வரவு செலவு திட்டத்தின் மூலம் வீசா கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுற்றுலா, மாணவர்கள் மற்றும் தொழில் உட்பட அனைத்து பிரிவுகளிலும் விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விசா கட்டணம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தினால் புதிய விசா ...

Read More »