அவுஸ்ரேலியாவின் குவாண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜாய்ஸ் முகத்தில் அடையாளம் தெரியாத நபர் ’பை’ என்ற உணவுப்பொருளை தேய்த்தும், அவர் கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேற்கு அவுஸ்ரேலியாவின் தலைநகரான பெர்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவுஸ்ரேலியாவின் அரசு விமான நிறுவனமான குவாண்டஸ்-ன் தலைமை அதிகாரி ஜாய்ஸ் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக மேடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு பெரியவர், திடீரென தன் கையிலிருந்த ‘பை’ எனப்படும் உணவுப் பொருளை, ஜாய்ஸ்-ன் முகத்தில் வைத்து தேய்த்துவிட்டு, சாதாரணமாக மேடையைவிட்டு கீழிறங்கிச் சென்றார். இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், ஜாய்ஸ் ஆரம்பத்தில் சிறிது அதிர்ச்சியடைந்தாலும், சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு அந்த சம்பவம் குறித்து நகைச்சுவையாக பேச ஆரம்பித்தார். அவரின் இந்த நடவடிக்கை அனைவரின் மனதையும் கவர்ந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசும் போதும், நகைச்சுவையாகவே ஜாய்ஸ் பேசினார்.
இந்த சம்பவம் குறித்து, ட்விட்டரில் பலர் நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் பதிவுகளை இட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal