செய்திமுரசு

அவுஸ்ரேலியா ஒபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்ரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்தியாவின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான சாய் பிரனீத் உடன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 25-23, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் கடைசியாக தான் விளையாடிய 5 ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 64,000 பேர் சட்டவிரோதமாக வாழ்கின்றனர்!

அவுஸ்ரேலியா வில் 64,600 பேர் சட்டவிரோதமாக வாழ்ந்துவருவதாக குடிவரவுத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் கடந்த 40 வருடங்களாக குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளின் கண்களில் படாமல் வாழ்கிறார். குறித்த 64,600 பேரில் மூன்றில் இரண்டு பங்கானவர்கள் அவுஸ்ரேலியாவிற்குள் சுற்றுலா விசா, மாணவர் விசா, வேலை செய்வதற்கான விடுமுறை விசா போன்ற சட்டபூர்வமான விசாவுடன் வந்தவர்கள் எனவும் இவர்களில் 70 வீதமானவர்கள் தமது விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது மட்டுமல்லாமல் இவர்களில் சுமார் 20,000 பேர் வேலை செய்துகொண்டிருக்கலாம் ...

Read More »

அவுஸ்ரேலிய ஒபனில் இருந்து பிவி சிந்து வெளியேறினார்!

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து நம்பர் ஒன் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். அவுஸ்ரேலிய ஓபன்: நம்பர் வீராங்கனையிடம் வீழ்ந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பிவி சிந்து சிட்னி நகரில் அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகளில் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையைான சீனதைபேயின் தாய் சு யிங்-ஐ எதிர்கொண்டார். முதல் சுற்றில் பிவி சிந்து 21-10 என எளிதில் வெற்றி பெற்றார். ...

Read More »

சிறிலங்கன் பெண் ஒருவரின் மேன்முறையீட்டை அவுஸ்ரேலிய நீதிமன்றம் நிராகரிப்பு

அவுஸ்ரேலியாவில் குடியுரிமைப் பெற்ற சிறிலங்கன் பெண் ஒருவரின் மேன்முறையீட்டை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது. மருத்துவரான குறித்த சிறிலங்கன்  பெண், தனது கணவரை கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்கான அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தமக்கான தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி அவர் மேன்முறையீட்டை செய்திருந்த நிலையில், அதற்கு மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் குழு மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவர் நாடுகடத்தப்படலாம் என்று அந்த நாட்டு  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

இணைந்து பணியாற்றுவதன் மூலம் மனித உயிர்களை பாதுகாக்க முடியும்! – அவுஸ்திரேலியாவின் சுயாதீன எல்லை செயற்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி

மனிதக் கடத்தல் சர்வதேச பிரச்சினை என்றும் எமது சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக இந்த அநியாயத்தை தோற்கடித்து மனித உயிர்களை பாதுகாக்க முடியும் என்று அவுஸ்திரேலியாவின் சுயாதீன எல்லை செயற்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி எயார் வய்ஸ் மார்ஷல் ஸ்டிபன் ஒஸ்போர்ன் (Stephen Osborne) கூறியுள்ளார். பயனுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதன் ஊடாக மனிதக் கடத்தல் படகுகளை நிறுத்துவதற்கு அவுஸ்திரேலியாவால் முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் அவுஸ்திரேலியாவின் எல்லைப் படைப் பிரிவின் ஓசன் சீல்ட் என்ற (Ocean Shield) ...

Read More »

காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் அலுவலகத்தின் கடமை!

காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் கடமையென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த அலுவலகத்தினூடாக யாருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த அலுவலகம் தொடர்பாக பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக யுத்த காலப்பகுதியின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதே பிரதான கடமையும் அதிகாரமும் ...

Read More »

விமானநிலையத்தில் இனிமேல் பச்சைநிறப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை!

அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியில் செல்லும்போதும் திரும்பிவரும்போதும் நிரப்பவேண்டிய பச்சை மற்றும் மஞ்சள் நிறப்படிவங்களை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? குறிப்பாக விமானநிலையத்தில் வைத்து அந்த பச்சைப் படிவத்தை நிரப்புவதற்கு அவசர அவசரமாக பேனா தேடி, பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொழில், பயணம் செய்யும் விமான இலக்கம் என பல விபரங்களை நிரப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம். தனிநபர்களை விடவும் குடும்பமாகச் செல்பவர்களுக்கு இப்படிவங்களை நிரப்புவதற்கென்றே நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இனிமேல் அந்தச் சிரமம் இல்லை. எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியில் செல்வோர் நிரப்பவேண்டிய பச்சை நிறப்படிவம் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரரை எதிர்கொள்கிறார் காஷ்யப்

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. 20 ஆம் திகதி முதல் 25-ந்திகதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீர்ரகளாக காஷ்யப், ஸ்ரீகாந்த் கிதாம்பி, பிரண்ணாய் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் பாருபள்ளி காஷ்யப், உலகின் முதல் தர வீரரான கொரியாவின் சன் வான் ஹோ-வை எதிர்கொள்கிறார். இந்தோனேசிய ஓபனை வெற்ற ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றில் சீனதைபே நாட்டைச் சேர்ந்த கான் சாயோ யு-வை எதிர்கொள்கிறார். இந்தோனேசிய ஓபனில் அரையிறுதியோடு வெளியேறிய எச்.எஸ். பிரண்ணாய், முதல் ...

Read More »

குடியுரிமைபெறுவதைக் கடினமாக்கும் சட்டமுன்வடிவிற்கு ஆதரவு கிடையாது- லேபர் கட்சி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் அரசு முன்வைக்கும் குடியுரிமை – Citizenship தொடர்பான புதிய சட்ட முன்வடிவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்கட்சியான லேபர் கட்சி அறிவித்துள்ளது. புதிய குடிவரவுச் சட்டமுன்வடிவு தொடர்பில் கடந்த ஏப்ரலில் அரசு அறிவித்தபோது, அதிலுள்ள சில அம்சங்கள் நியாயமானவையாக இருப்பதால் அதற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுமென லேபர் கட்சி அறிவித்திருந்தது. எனினும் இன்றையதினம் நடைபெற்ற லேபர் கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தின் முடிவில், இச்சட்டமுன்வடிவிற்கு ஆதரவு வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக லேபர் கட்சியின் குடியுரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் Tony Bourke தெரிவித்தார். Permanent Residency ...

Read More »

அவுஸ்ரேலியாவில் படுகொலைகள் குறைந்துள்ளது!

அவுஸ்ரேலியாவில் படுகொலைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் கொலைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை 1989 முதல் 1990 வரையான காலப்பகுதியில் மொத்தம் 307 கொலைகள் நாட்டில் நடந்துள்ளன என்றும், ஆனால் 2013-14 ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 238 ஆக குறைந்துள்ளது அவுஸ்ரேலிய குற்றவியல் நிறுவனம் (Australian Institute of Criminology) தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ஆண்டுக்கு 69 படுகொலைகள் குறைவாக இடம்பெற்றுள்ளது. மேலும் பெரும்பாலான கொலைகள் கத்தியால் கத்தப்பட்டவை என்றும் ஆனால் ஆண்டுக்கு 32 பேர் துப்பாக்கியால் ...

Read More »