அவுஸ்ரேலியாவில் குடியுரிமைப் பெற்ற சிறிலங்கன் பெண் ஒருவரின் மேன்முறையீட்டை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது.
மருத்துவரான குறித்த சிறிலங்கன் பெண், தனது கணவரை கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்த குற்றத்திற்கான அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தமக்கான தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி அவர் மேன்முறையீட்டை செய்திருந்த நிலையில், அதற்கு மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவர் நாடுகடத்தப்படலாம் என்று அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal