அவுஸ்ரேலியாவில் படுகொலைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் கொலைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 1989 முதல் 1990 வரையான காலப்பகுதியில் மொத்தம் 307 கொலைகள் நாட்டில் நடந்துள்ளன என்றும், ஆனால் 2013-14 ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 238 ஆக குறைந்துள்ளது அவுஸ்ரேலிய குற்றவியல் நிறுவனம் (Australian Institute of Criminology) தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ஆண்டுக்கு 69 படுகொலைகள் குறைவாக இடம்பெற்றுள்ளது.
மேலும் பெரும்பாலான கொலைகள் கத்தியால் கத்தப்பட்டவை என்றும் ஆனால் ஆண்டுக்கு 32 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்றும் குறித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.