செய்திமுரசு

நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைவாகக் கொடுத்தால் தண்டனை!

தொழிலாளர்களுக்கு சரியாகச் சம்பளம் கொடுக்காதவர்களைத் தண்டிக்கும் சட்டம் விக்டோரிய மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அவுஸ்ரேலியாவில்  முதன்முறையாக ஊதியத் திருட்டைக் குற்றமாக்கும் சட்டம் இதுவாகும். தொழிற்சங்கங்களும் அது சார்ந்த தொழில்துறை வழக்குரைஞர்களும், நாட்டில் ஊதியத் திருட்டு பரவலாகக் காணப்படுகிறது என்றும், மற்றைய மானிலங்களும் விக்டோரியாவின் வழியைப் பின்பற்ற வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

Read More »

கதைசொல்லி சஞ்சய்!

ஒரு கலைஞர் தன்னுடைய கலையின் மூலமாக ரசிகர்களுடன் பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அந்தக் கலையின் பல சிறப்பான அம்சங்கள் அந்தக் கலைஞரிடம் ஏதோ ஒரே நாளில் வந்தடைந்த கண்கட்டு வித்தை அல்ல. அதற்குப் பின்னால் நிறைய வலிகள் இருக்கும்… கோபங்கள் இருக்கும்… பயிற்சிகள் இருக்கும்… அவமானங்கள் இருக்கும்… எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்… ஏக்கங்கள் இருக்கும். ‘கலைப் பயணத்தில் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவருக்கான இந்த இடம் எப்படிக் கிடைத்தது?’ என்பதில் இருக்கும் சுவாரஸ்யங்களை ஒரு கலைஞரே தன்னுடைய ரசிகருக்குச் சொல்வது அலாதியான ...

Read More »

இதுபோன்ற இழி செயல்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம்: டொமினிக்கன் பிரதமர்

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெகுல் சோஸ்கியை கடத்த சதித் திட்டம் தீட்டியதாக தங்கள் நாட்டின் மீது எழுந்துள்ள புகாரை டொமினிக்கன் நாட்டுப் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் மறுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, 2018-லிருந்து ஆன்டிகுவா தீவில் வசித்துவந்தார். இதற்கிடையில் கடந்த மே 23-ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் காதலியுடன் கியூபா தப்ப இருந்தவரை டொமினிக்கன் தீவு போலீஸார் கைது செய்தனர். ஆனால், சோக்சி ...

Read More »

வெளிமாவட்டத்தவர்களின் வருகையாலேயே முல்லையில் கொவிட் தொற்று

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டத்தவர்களின் வருகை அதிகரித்துள்ளதாலேயே கொவிட் – 19 தொற்றும் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்புத்தரப்பினரும், அரச திணைக்களங்களும், அதிகரித்துள்ள வெளிமாவட்டத்தவர்களின் வருகையினைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நாயாற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குடும்பங்களுடன் தங்கியுள்ள வெளிமாவட்ட மீனவர்களில் 25பேருக்கு கடந்தமாதம் 29ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில், ஐவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் ...

Read More »

சிறிலங்கா அரசாங்கம் ஏன் இப்படி செயற்படுகிறது?

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் ...

Read More »

கோட்டாபய விடுவிக்கப்பட்டார்!

டி.ஏ. ராஜபக்ஷ ;ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து ; 6 பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே கடந்த 2019 நவம்பர் 21 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலரும், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று ஏனைய பிரதிவதிகளான 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். முதலாவது நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் இதற்கான ...

Read More »

இளம் கவிஞரை தடுத்து வைப்பது சட்ட விரோதமானது!

நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக ; கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் ; தடுத்து வைக்க, ஜனாதிபதி கையெழுத்திட்ட தடுப்புக் காவல் உத்தரவானது சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ; நேற்று முதன் முறையக பரிசீலனைக்கு ; வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ...

Read More »

மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது

மன்னார் – மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி மூன்று மொழிகளிலும் ஒப்பு கொடுக்கப்பட்டது. இன்று காலை 6.15க்கு இந்த திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இமானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். இதனையடுத்து திருச் சொரூப ஆசியும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 பெருத்தொற்று காரணமாக பக்தர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோருக்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read More »

அமைச்சரவை அந்தஸ்து பறிபோகும் நிலையில் முக்கிய அமைச்சர்கள்!

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக மிக விரைவில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்போது அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சரவை அந்தஸ்து பறிபோகவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சகல துறைகளிலும் பின்தங்கியுள்ள இலங்கை நாணயத்தாள்களில் அச்சிடுவதில் மாத்திரம் முன்னிலை வகிக்கிறது. ...

Read More »

‘ முன்னே 20 வரும் பின்னே பஷில் வருவார்’

நாடாளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்‌ஷ  வருவது எமக்கொன்றும் புதுமையான விடயமல்ல எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார   அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வந்தபோதே  பஷில் வருவாரென்று தெரிந்துக்கொண்டோம் என்றார். எதிர்க்கட்சித்  தலைவர் அலுவலகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அரசாங்கத்தில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பற்றி  கதைப்பதற்கு கூட யாருமில்லை என்பதால் சேர் பெயிலென தெரிந்துக்கொண்டு  அதிலிருந்து மீள பஷிலைப் பயன்படுத்த பார்க்கின்றனர் என்றார். இந்த அரசாங்கத்தால் பொருளாதார  ...

Read More »