அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக மிக விரைவில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதன்போது அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சரவை அந்தஸ்து பறிபோகவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சகல துறைகளிலும் பின்தங்கியுள்ள இலங்கை நாணயத்தாள்களில் அச்சிடுவதில் மாத்திரம் முன்னிலை வகிக்கிறது. கடந்த சில வாரங்களில் மாத்திரம் 11,280 கோடி ரூபா அதாவது 22.5 கோடி 5,000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அத்தோடு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அரிசி மாபியாக்களிடம் அரசாங்கம் தலைவணங்கிக் கொண்டிருக்கிறது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.