மன்னார் – மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி மூன்று மொழிகளிலும் ஒப்பு கொடுக்கப்பட்டது. இன்று காலை 6.15க்கு இந்த திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இமானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
இதனையடுத்து திருச் சொரூப ஆசியும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 பெருத்தொற்று காரணமாக பக்தர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோருக்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal