செய்திமுரசு

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அங்குள்ள சேப்பல் தெருவில் உள்ள ஒரு கட்டிடம் சேதம் ...

Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது!-ஆஸ்திரேலிய மாநிலம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள மாநிலங்கள், பிரதேசங்கள் ஊரடங்கினால் தொற்றினை ஒழிக்க முடியாது எனும் எண்ணத்திற்கு வந்துள்ளன. இதனை தொற்று பரவலுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய மாநில அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதமானோரை கொண்டுள்ள விக்டோரியா மாநிலம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி செலுத்திய பின்னர், ஊரடங்கினை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா ...

Read More »

விமானத்தில் நாயை அழைத்து வர பெண் செய்த காரியம்

சமீபத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வர செய்த காரியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விமானங்களில் நாய், பூனை போன்ற செல்ல வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறது. இவை 5 கிலோ எடைக்கும் கீழ் இருந்தால் அவற்றை அதற்கான விசே‌ஷ காற்றோட்ட வசதி உள்ள பையில் அடைத்துக் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் சரக்கு கேபின் மூலமாகவும் இவற்றை கொண்டு வரலாம். இதற்காக தனி டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும். சமீபத்தில் மும்பையில் ...

Read More »

மீண்டும் அரியணை ஏறுவாரா ட்ரூடோ?

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுதேர்தலில் வாக்களிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை ( இரண்டு வருடகாலத்திற்கு முன்பாக ) தேர்தலை அறிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் – மூன்றாவது முறையாக அரியணை ஏறுவதே அவரது நோக்கம். ஐந்து வாரகாலமாக தீவிரமாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து தலைவர்களும் வாக்காளர்களை நோக்கி தங்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இரண்டு முன்னணி வேட்பாளர்கள் மத்தியிலான கடுமையான போட்டி தொற்றுநோயிலிருந்து ...

Read More »

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் – துஷான் குணவர்தன

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு இரண்டு அமைச்சர்கள் பிரச்சினைக்குள்ளாகி என்னைப் பதவிலிருந்து விலக்கத் திட்டமிட்டுள்ளனர் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித் துள்ளார். எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனது உயிரைக் காப்பாற்றப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைப் பூடு ...

Read More »

அரசாங்கத்துக்குள் பனிப்போர்!

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்கே அந்த 10 பங்காளிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Read More »

ஆஸி.யில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்- பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்த காவல் துறை

ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்களின்போது பொது மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அவ்வகையில், ...

Read More »

ஸ்பெயின் தீவில் எரிமலை வெடித்து சிதறியது

ஸ்பெயினுக்கு சொந்தமான தீவில் எரிமலை வெடித்து சிதறிய நிலையில் அப்பகுதி மக்கள் வெளியேறி இருந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது. இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது ஆகும். இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவில் 8 எரிமலைகள் உள்ளன. அவை தற்போதும் அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலைகளில் ஒன்று ‘கும்ப்ரே வியாஜே’ 1971-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து சிதறியது. அதன் பிறகு 50 ஆண்டு காலம் மவுனமாக ...

Read More »

அரசாங்கம், ஐநாவை… கையாளத் தொடங்கி விட்டதா?

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ஓர் ...

Read More »