கனடாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுதேர்தலில் வாக்களிக்கின்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை ( இரண்டு வருடகாலத்திற்கு முன்பாக ) தேர்தலை அறிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் – மூன்றாவது முறையாக அரியணை ஏறுவதே அவரது நோக்கம்.
ஐந்து வாரகாலமாக தீவிரமாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து தலைவர்களும் வாக்காளர்களை நோக்கி தங்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர்.
இரண்டு முன்னணி வேட்பாளர்கள் மத்தியிலான கடுமையான போட்டி
தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளினை நாடு தெரிவு செய்யவேண்டிய முக்கியமான தருணம் இதுவென பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
2019 ஒக்டோபரில் இடம்பெற்ற தேர்தலின் போது லிபரல் கட்சி மயிரிழையிலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து பிரதமர் சிறுபான்மை கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தார் எனினும் அவர் நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சியின் ஆதரவை பெறவேண்டிய நிலையில் காணப்பட்டார்.
எனினும் ஆகஸ்ட் மாதம் அவர் தேர்தலை அறிவித்த பின்னர் கட்சிக்கான ஆதரவு குறைவடையதொடங்கியது.கென்சவேர்ட்டிவ் கட்சியின் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது.
கென்சவேர்ட்டிவ் கட்;சியின் தலைவர் எரின் ஓ டுல் கனடா மக்களிற்கு பெருமளவு அறிமுகமாகதவராகவே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
ஆனால் மிதவாத வேட்பாளர்களை நோக்கிய அவரது பிரச்சாரம் வெற்றியளிக்க தொடங்கியுள்ளது.
லிபரல் கட்சியின் ஆதரவு குறைவடைந்;துள்ளமைக்கான சில காரணங்கள்
நாட்டை மீண்டும் பெருந்தொற்று ஆட்கொண்டுள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலிற்கான அவசியம் என்னவென கனடா மக்கள் கேள்வி எழுப்பினர்.அரசியல் ஊழல்கள் குறித்த சர்ச்சைகளும்; பிரச்சாரத்தின் போது பிரதமருக்கு பாதிப்பை ஏற்படுத்தின.
செப்டம்பர் முதல் கருத்துக்கணிப்பில் இரு முக்கிய கட்சிகளிற்கும் இடையில் கடும் போட்டி காணப்படுகி;ன்றது.
இரண்டு கட்சிகளும் 30வீத ஆதரவையே பெற்றுள்ளமை இன்னொரு சிறுபான்மை அரசாங்கத்திற்கான வாய்ப்பினை புலப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக வாக்காளர்களை அதிகளவிற்கு வாக்களிக்கச்செய்வதற்கான திறமை எந்த கட்சிக்கு அதிகமாக உள்ளது என்பது இன்றைய தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்
மீண்டும் 2019 இரு பிரதான கட்சிகளும் இரண்டு வருடத்திற்கு முன்னர் தங்கள் பிரச்சாரத்தை முடித்த இடத்திலேயே மீண்டும் முடித்துள்ளன.
லிபரல்களிற்கு வாக்காளர்கள் அதிகமாக உள்ள கியுபெக் ஓன்டாரியோ போன்ற பகுதிகளில் அதிக செல்வாக்குள்ளது,இது அவர்களிற்கு சாதகமான தன்மையை வழங்கியுள்ளது என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கென்சவேர்ட்டிவ்களிற்கு அவர்களது பாரம்பரிய பகுதிகளான அல்பேர்ட்டா சஸ்காச்சுவெனிலும் பெரும் ஆதரவு காணப்படுகின்றது எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.அதேபோன்று கனடாவின் மக்கள்கட்சிக்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.
தேர்தல் மீது தாக்கம் செலுத்திய பெருந்தொற்று
கொவிட் காரணமாக கனடாவி;ல் 27000 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தைய பரவல் காரணமாக சில மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன,குறிப்பாக அல்பேர்ட்டா – அங்கு மருத்துவமனைகளின் அதிதீவிர கிசிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.
அல்பேர்ட்டாவில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முன்னர் அகற்றப்பட்டகட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதுதேர்தல் பிரச்சாரத்தில் இடம்பிடித்ததுடன் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை முன்கூட்டியே தேர்தலிற்கு அழைப்பு விடுத்தமைக்காக பிரதமரை சாடிவரும் ஓ டுல் இது சுயநலமிக்க தீர்மானம் என தெரிவித்துள்ளார்.