ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அங்குள்ள சேப்பல் தெருவில் உள்ள ஒரு கட்டிடம் சேதம் அடைந்தது. அதிலிருந்த செங்கற்கள் இடிந்து விழுந்தது. நில நடுக்கத்தால் பெரிய சேதங்கள் ஏற்பட்டதற்கான தகவல் எதுவும் இல்லை என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal