இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு இரண்டு அமைச்சர்கள் பிரச்சினைக்குள்ளாகி என்னைப் பதவிலிருந்து விலக்கத் திட்டமிட்டுள்ளனர் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித் துள்ளார்.
எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனது உயிரைக் காப்பாற்றப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளைப் பூடு மோசடிக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டமையே தனக்கு ஏற்பட்ட இந்த அழுத்தத்திற்கு உடனடிக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தான் இராஜினாமா செய்த பிறகு அந்தப் பதவிக்கு உதவியாளர் ஒருவரை நியமிக்கத் தயார் என தான் அறிந்ததாகவும் குறித்த இரண்டு அமைச்சர்களின் அதிகாரத்தின் கீழ் இந்நிறுவனம் தனியார் நிறுவனமாக மாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal