செய்திமுரசு

5 முதல் 11 வயதினருக்கு பைசர் தடுப்பூசி

பைசர் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்த ...

Read More »

பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல்

புவி காந்த புயல் காரணமாக மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படலாம். மின்சாரத்தில் நிலையற்ற தன்மை, பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்பு உள்ளது. பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:- வலுவான புவி காந்த புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையில் அதன் தாக்கம் உணரப்பட ...

Read More »

மக்கள் வங்கியின் நிதி வழங்கல் தொடர்பில் ஆராயுமாறு நிதியமைச்சருக்கு கோரிக்கை

சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அனுப்பிய கடிதத்தின் மூலம் நிதியமைச்சருக்கு இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது பற்றிய விவரங்கள் ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடனை சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால், சீன உர நிறுவனத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, விரும்பத்தகாத மற்றும் ஆரோக்கியமற்ற சூழ்நிலை ஏற்படலாம் என்பதை அறிக்கை குறிக்கிறது.   மேலும், மக்கள் வங்கியுடன் ஏற்கனவே கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ...

Read More »

மனதை ரணமாக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு மையத்தின் நிலை

“அவர்கள் இதனை ஹோட்டல் என்கிறார்கள், ஆனால் இது ஒரு சிறை. தனியார் கையில் உள்ள சிறை. இந்த அகதிகளின் துயரத்தை வைத்து மில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். மெல்பேர்ன் நகரின் நடுவே உள்ள கறை இது. இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் அரண் மயில்வாகனம்.

Read More »

குறைவாக சாப்பிடுங்கள் என மக்களுக்கு உத்தரவு பிறப்பித்த கிம் ஜாங் அன்

1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால் வடகொரியா பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வந்தது. இந்த நிலையில், உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தோன்றியது. இதன்காரணமாக தனது எல்லைகளை வடகொரியா மூடி உள்ளது. மேலும் சீனாவில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா நிறுத்தி விட்டது. இதனால் ...

Read More »

இனப்பரம்பலை மாற்றவா சிங்களக் குடியேற்றம்?

ஓன்றில் அதிகாரத்தைக் குறைப்பது; அல்லது, குடியேற்றத்தை நிகழ்த்தி இனப்பரம்பலைக் குறைப்பது. இதுதான், இலங்கை அரசாங்கத்தின் தாரக மந்திரம். இரண்டும் நல்ல திட்டமே! திட்டமிட்ட வகையில் நடைபெறும்  குடியேற்றங்களால், தமிழர்களின் வடக்கு – கிழக்கு பூர்வீக தாயகம் என்ற நிலைப்பாட்டில், நிரந்தரமாக மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற விடாப்பிடியே இதிலிருந்து புலப்படும். இந்த வகையில்தான், இலங்கையின்  சிங்கள பெரும்பான்மை அரசுகள், தமிழர்களின் மரபுவழித் தாயக நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு   சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றன என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டும் பலமுடையதாக ...

Read More »

சிங்கள குடியேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றை வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுடன் எல்லை நிர்ணயத்தின் ஊடாக இணைக்க மேற்கொள்ளப்படும் செயற்பாட்டை கண்டித்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று (29) இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், வவுனியாவில் போராட்டத்தில் இடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பழைய பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற ...

Read More »

சீனா அதிரடி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது

இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு  சீனா சேர்த்துவிட்டுள்ளது. கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால்  கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

வட மாகாண முன்னாள் ஆளுநர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு?

இரண்டு ஆணைக்குழுக்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுந்தரம் அருமைநாயகம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Read More »