1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர்.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால் வடகொரியா பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வந்தது.
இந்த நிலையில், உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தோன்றியது.
இதன்காரணமாக தனது எல்லைகளை வடகொரியா மூடி உள்ளது. மேலும் சீனாவில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா நிறுத்தி விட்டது.
இதனால் அங்கு உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ன.
இந்த உணவு தட்டுப்பாடு அங்கு 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. 2025-ம் ஆண்டு வரை மூடிய எல்லைகளை திறக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டிருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.