செய்திமுரசு

நெய்தவனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்!

சாதாரணமாக ஒரு தீவிர நோயிலிருந்து மீண்டுவந்தால் செத்துப் பிழைத்தேன் என்று சொல்வார்கள். ஆனால், நான் நிஜமாகவே ‘செத்துப் பிழைத்தேன்’. மூன்றாம் முறையாக மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்ந்த 30 நிமிடங்களுக்குள் இதயத் துடிப்பு நின்று, கண் செருகி, வாய் பிறழ்ந்த நிலையில் மருத்துவரும், நவீன உத்திகளும், மின்சார ‘ஷாக்’கும் என்னை இரண்டு நிமிடங்களில் உயிர்ப்பித்துவிட்டன. வீடு திரும்பினேன். மகனும் மகளும் அவரவர் தேசத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். பிறகுதான் கரோனாவும் ஊரடங்கும் வந்தன. தனியாக வசிக்கும் எனக்கு தினசரி வாழ்க்கை சவாலாக ஆகிவிட்டது. ஒருநாள், ‘85 ...

Read More »

ஆஸ்திரேலியர்களை முகநூல்  நிறுவனம் மிரட்டியுள்ளது!

ஆஸ்திரேலியர்கள், தனது தளத்தில் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதைத் தடை செய்யப்போவதாக முகநூல்  நிறுவனம் மிரட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் பரிந்துரைத்துள்ள புதிய ஊடக சட்டத்தின் தொடர்பில்  முகநூல்  அவ்வாறு தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டி வரலாம். இணைய விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியைத் தொழில்நுட்ப நிறுவனங்களே எடுத்துக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்டுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா பரிந்துரைத்துள்ள புதிய சட்டத்தின் மீது உலக நாடுகளின் ...

Read More »

அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் பாடாய்படுத்துகிறது. கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அனைத்து நாடுகளும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியே தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பல மாதங்களாக இந்த ஊரடங்கை அமல்படுத்தி வருவதால் நாடுகளின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் ...

Read More »

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 20வது திருத்தத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது!

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 20வது திருத்தத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது என தகவலகள் வெளியாகியுள்ளன. 19வது திருத்தம் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் ஐந்து வருடங்களுக்கு மாத்திரம் பதவி வகிக்கலாம் என தெரிவித்துள்ளது. எனினும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் இந்த விடயத்தில் மாற்றங்கள் காணப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 19வது திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியும் ...

Read More »

விக்கியை கைது செய்யுங்கள் என்கிறார் சுதந்த தேரர்

புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:- அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும். அதுமட்டுமல்ல விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்து வாக்குமூலம் பதிவுசெய்யவேண்டும். நாடாளுமன்றத்துக்குள் மட்டுமல்ல வெளியிலும் ...

Read More »

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் இடையே ஒப்பந்தம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே காசா பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ...

Read More »

பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்… இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் பிரணாப் கடந்த 9-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சியற்ற நிலையில் இருந்ததால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையும், மூளையில் ரத்தக்கட்டி ...

Read More »

20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்

20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜிஎல்பீரிஸ் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில் இரண்டு போதும் என தெரிவித்துள்ளார். 20வது திருதத்தத்தில் காணப்படுகின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதும் மக்களின் கருத்து அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக 20வது திருத்தம் சில வாரங்களில் நிறைவேற்றப்பட்டுவிடும் என அவர் தெரிவித்துள்ளார் . புதிய திருத்தங்கள் நாட்டின் முதல்பிரஜையின் அதிகாரங்களை வலுப்படுத்தும், பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை வலுப்படுத்தும் என ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ...

Read More »

சிறைச்சாலைகளில் 444 பேர் இன்று விடுதலை!

சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைப்பத ற்கு நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் 444 பேர் வரையிலான கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனா திபதியின் தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடு தலை செய்யப்படவுள்ளனர். அத்துடன், புதிய கொரோனா வைரஸ் பரவுவதாலும், சிறைகளில் தற்போது ஏற்படும் நெரிசல் காரணமாகவும், கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தீர்மானித் துள்ளதாக சிறசை்சாலை கள் ஆணை யாளர் துஷார உப் புல் தெனிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று செவ்வாய்கிகழமை விடுதலை செய்யப்பட ...

Read More »

இணையத்தள ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

இணையத்தள ஆசிரியரான டெஸ்மன்ட் சதுரங்க டி அல்விஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர் கைதானதாகவும், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காகவே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லங்காநியுஸ்வெப் என்ற இணையத்தள ஆசிரியராக இவர் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »