சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைப்பத ற்கு நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் 444 பேர் வரையிலான கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனா திபதியின் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடு தலை செய்யப்படவுள்ளனர். அத்துடன், புதிய கொரோனா வைரஸ் பரவுவதாலும், சிறைகளில் தற்போது ஏற்படும் நெரிசல் காரணமாகவும், கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தீர்மானித் துள்ளதாக சிறசை்சாலை கள் ஆணை யாளர் துஷார உப் புல் தெனிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று செவ்வாய்கிகழமை விடுதலை செய்யப்பட வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய 29 சிறைச்சாலைகளை சேர்ந்த 18 பெண்கள் உட்பட 44 கைதிகளே இன்று விடுதலை செய்யப்படவுள்ள னர். அவர்களுள் 83 பேர் வெலிகட சிறைச்சாலையைச் சேர்ந் தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்கா கச் சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காகச் சிறையில் உள்ளவர் களே இவ் வாறு பொது மன்னிப்பின் கீழ் விடு தலை செய்யப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு சுற்றிவளைப்பின் கீழ் கடந்த நாட்களில் சந்தேக நபர்கள் ஏராளமானோர்கள் கைது செய்யப்பட்டதால் தற்போது சிறைச்சாலைகளில் நெருச்சல் நிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.