ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 20வது திருத்தத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது!

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 20வது திருத்தத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது என தகவலகள் வெளியாகியுள்ளன.

19வது திருத்தம் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் ஐந்து வருடங்களுக்கு மாத்திரம் பதவி வகிக்கலாம் என தெரிவித்துள்ளது.

எனினும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் இந்த விடயத்தில் மாற்றங்கள் காணப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

19வது திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ள அரசாங்க வட்டாரங்கள் குறிப்பாக ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கமுடியும் என தெரிவித்துள்ளன.