செய்திமுரசு

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது. இதன்படி ...

Read More »

வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை

வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு அவர் எழுதிய சுயசரிதத்தைத் தவிர வேறு எந்த ஒரு ஆவணமும் இல்லை. ஒருவேளை அவர் தனது சுயசரிதத்தை எழுதாமல் போயிருந்தால் அவரது சிறை வாழ்க்கை குறித்து நம்மால் எதையும் அறிய முடியாமலேயே போயிருக்கும். திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இ.பி.கோ. பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுப் பின்னர் அது பிரிவு 107(4) ஆக மாற்றப்பட்டது. அவ்வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே மூவரும் கைதுசெய்யப்பட்டனர். நன்னடத்தைக்காகச் செலுத்தச் ...

Read More »

இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயற்சி

இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது, சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின் வல்லமையை வெளிப்படுத்துவதும் அதனை தக்கவைப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளது. மியன்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் சீனா தனது இராணுவ உட்கட்டமைப்புகளை உருவாக்க முயலக்கூடும் என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது முப்படைக்களுக்காக மேலதிக இராணுவவிநியோக உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்கனவே ...

Read More »

கனடாவில் ஈழத்து இளைஞர் படகு விபத்தில் பலி!

கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த இலங்கைகொன் பல்லவநம்பி (46வயது) என்பவர் மிகவும் பரிதாபமாக பலியாகியுள்ளார். இவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் அறியப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவர் படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர். சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக காவல் துறையினரும் , மருத்துவ அவசரஉதவியும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதாகவும், மேலும் ...

Read More »

பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா செய்யலாம் என சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read More »

19ஆவது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் என்ன?

நேற்று (3) வெளியாகியுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் 19வது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டை பிரஜாவுரிமையை உடையவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வதை தடை செய்யும் விதத்தில் 19வது திருத்தத்தில் காணப்பட்ட ஏற்பாடுகள் 20வது திருத்தத்தின் நகல்வடிவில் நீக்கப்பட்டுள்ளன . ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது . 30வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். அரசாங்கமொன்றில் 30 அமைச்சுகளே காணப்படலாம் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வருடகாலத்தின் பின்னர் ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என நகல்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

தீர்வா இன்னொரு தலைநகரம்?

மதுரையைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட தலைநகரங்களைக் கொண்ட மாநிலங்கள் உண்டு. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது ஸ்ரீநகர் கோடைகாலத் தலைநகரமாகவும் ஜம்மு குளிர்காலத் தலைநகரமாகவும் இருந்தன. மஹாராஷ்டிரத்தில் மும்பை தலைநகரமாகவும், நாக்பூர் குளிர்காலத் தலைநகரமாகவும் இருந்துவருகின்றன. விதர்பா பிராந்தியத்துக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நாக்பூரில் ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஷிம்லாவுக்கு அடுத்து தர்மஷாலாவை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் இரண்டாவது தலை நகர ...

Read More »

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரின் பதவிக்காலம் 2023 வரை

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கேரி ஸ்டீட்டின் பதவிக்காலம் 2023 உலகக்கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கேரி ஸ்டீட் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையில் நியூசிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பவுண்டரி அடிப்படையில் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் வங்காளதேசம், ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாவிதன்வெளி பிரதேச சபையை இழந்தது

அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த நிலையில் அப்பதவி வெற்றிடமானதையடுத்து புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்று புதன்கிழமை பதில் தவிசாளர் ஏ.கே அப்துல் சமட் தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய தவிசாளர் தெரிவு செய்வதற்கான தேர்தலை ...

Read More »

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று(02.09.2020) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், நிபுணர் குழுவில் தமிழ் முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் அடங்கிய 9 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் இலங்கையில் வாழுகின்ற பல்லின சமூகங்களினதும் அபிலாசைகளையும் ...

Read More »