நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கேரி ஸ்டீட்டின் பதவிக்காலம் 2023 உலகக்கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கேரி ஸ்டீட் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவரது தலைமையில் நியூசிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பவுண்டரி அடிப்படையில் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.
டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3-வது இடத்திற்கும் முன்னேறியது. இதன்மூலம் அவரது பதவிக்காலம் 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal