செய்திமுரசு

நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காத சீனா

சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது. இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் ...

Read More »

சிட்னி டெஸ்ட்: ரஹானேவுக்கு மீண்டும் புதிர் தகவல் அனுப்பிய வாசிம் ஜாபர்

சிட்னி டெஸ்டில் பேட்டிங் ஆர்டரை இந்த வரிசையில் தேர்வு செய்யுங்கள் என்று ரஹானேவுக்கு புதிர் மெஸேஜ் அனுப்பியுள்ளார் வாசிம் ஜாபர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந்திகதி நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோர் சரியாக விளையாடவில்லை. ஷுப்மன் கில் அறிமுக போட்டிகள் நம்பிக்கையூட்டும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்? என ரசிர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ...

Read More »

ஜூலியன் அசஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் தடை

விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயினை அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு நாடு கடத்த முடியாது என லண்டன் நீதிமன்றம் தீர்;ப்பளித்துள்ளது. அசஞ்சேயின் உளவியல் நிலையை கருத்தில்கொள்ளும்போது அவர் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்பதால் நீதிபதி அவரை நாடுகடத்துவதற்கு எதிரான உத்தரவை வெளியிட்டுள்ளார். விக்கிலீக்சின் இணைஸ்தாபகர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்ககூடிய நிலையில் அமெரிக்கா இல்லையென நீதிபதி வனேசா பரைட்செர் தெரிவித்துள்ளார். அவர் தனக்குதானே தீங்கிழைத்துக்கொள்வதற்கான தற்கொலை செய்துகொள்வதற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ள நீதிபதி மனச்சோர்வடைந்த சில நேரங்களில் விரக்தியடைந்த மனிதர் தனது எதிர்காலத்திற்காக அஞ்சுகின்றார் என்பதே அசஞ்சே ...

Read More »

சர்வதேசச் சமவாயமும் இலங்கை அரசியல் யாப்பும்

சர்வதேச சமவாயத்தைக் கொச்சைப்படுத்தும் முறையிலேயே இலங்கை பாராளுமன்றம் 2007 இல் அதனை அங்கீகரித்துள்ளது என்பதைக்கூட ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்குச் சம்பந்தன் இடித்துரைக்கவில்லை. மாறாக ரணில் மைத்திரி அரசாங்கம் மீதான பொய்யான நம்பிக்கை மாத்திரமே மக்களுக்கு ஊட்டப்பட்டது. சர்வதேசச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற உறுப்புரையை நீக்கம் செய்து 2007 ஆம் ஆண்டு சமவாயச் சட்டம் என்ற பெயரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் 56 ஆம் இலக்கச் சட்டமாக இணைத்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது அந்தச் சமவாயச் ...

Read More »

வவுனியாவில் கர்ப்பிணிக்கு கொவிட்-19 தொற்று; சில பகுதிகள் முடக்கம்

வவுனியாவில் விரைவான அன்டிஜென் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா வேப்பங்குளத்தின் சில பகுதிகள் காவல் துறையால் முடக்கப்பட்டுள்ளன. வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்டிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண்ணின் இருப்பிடமான வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கை மற்றும் 2,3,4,5 ஆம் ஒழுங்கைப் பகுதிகள் பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டு பாதுகாப்பு கடைமைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பெண்ணுக்கு அன்டிஜென் ...

Read More »

சிறிலங்காவில் விமான நிலைய திறப்பு எப்போது?

ஜனவரி 22 க்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து வணிக விமானங்களுக்கும் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். இன்று (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டம் அதன் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Read More »

யாழ். மாநகர சபையின் அரசியல்; யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்?

‘தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!” என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. ‘நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னைத் தந்தாய், இந்தக் கொடுக்கல் வாங்கலில் யாருக்கு லாபம்” என்பது இதன் பொருள். நடந்து முடிந்த யாழ்நகர மேயர், நல்லூர் தவிசாளர் தெரிவுக்கான கொடுக்கல் வாங்கலில் வென்றது யார்? தோற்றது யார்? யாருக்கு லாபம்? அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் பற்றியும், தலைவிரித்தாடும் கொரோனா கொடுநோயின் தாக்கம் பற்றியும் எல்லோரும் மோதிக் ...

Read More »

பப்புவா நியு கினியாவில் நிலச்சரிவு! 15 பேர் பலி

பப்புவா நியூ கினியாவிலுள்ள கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் அண்மைக்காலமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டியுள்ள மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு . எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும். ஹெலிகொப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல முடியும் எனவும் ...

Read More »

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

ஆப்கானிஸ்தானின் மத்தியமாகாணமான கோரில் காரில் பயணித்துக்கொண்டிருந்தவேளை பிஸ்மெல்லா அடெல் அய்மெக் என்ற 28 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சடாஈகோ ( கோரின் குரல்) என்ற வானொலியின் ஆசிரியரே இ;வ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துரதிஸ்டவசமாக பிஸ்மெல்லா அடெல் அய்மெக் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என மாகாணஆளுநர் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஸ்ரவ் கானி இந்த படுகொலையை கண்டித்துள்ளதுடன் தனது அரசாங்கம் தொடர்ந்தும் கருத்துசுதந்திரத்தை ஆதரிக்கும் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார். தலிபானோ அல்லது வேறு எந்த அமைப்பாலோ பத்திரிகையாளர்களின் அல்லது ஊடங்களின் நியாயபூர்வமான குரல்களை அடக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ...

Read More »

உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை நிறுத்துவதற்கு பல உலக நாடுகள் ஆதரவு

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன என பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துள்ளது. தென்னாபிhக்கா பொட்ஸ்வானா மலாவி அவுஸ்திரேலிய நியுசிலாந்து இந்தோனேசியா உட்பட பல நாடுகள் இந்த விடயத்தில் தங்களிற்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவரம் பாதூரமானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் செயலணியொன்றை உருவாக்கியுள்ளோம் ஆண்டவன் அருளிலிருந்தால் நாங்கள் கொரோனாவைரசினால் ...

Read More »