ஆப்கானிஸ்தானின் மத்தியமாகாணமான கோரில் காரில் பயணித்துக்கொண்டிருந்தவேளை பிஸ்மெல்லா அடெல் அய்மெக் என்ற 28 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சடாஈகோ ( கோரின் குரல்) என்ற வானொலியின் ஆசிரியரே இ;வ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துரதிஸ்டவசமாக பிஸ்மெல்லா அடெல் அய்மெக் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என மாகாணஆளுநர் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஸ்ரவ் கானி இந்த படுகொலையை கண்டித்துள்ளதுடன் தனது அரசாங்கம் தொடர்ந்தும் கருத்துசுதந்திரத்தை ஆதரிக்கும் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார்.
தலிபானோ அல்லது வேறு எந்த அமைப்பாலோ பத்திரிகையாளர்களின் அல்லது ஊடங்களின் நியாயபூர்வமான குரல்களை அடக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைக்கு எந்த அமைப்பும் உரிமை கோராதது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal