கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவருக்கு பொது மன்னிப்பளித்து அவர்களை வழக்கின் அரச சாட்சிகளாக பயன்படுத்த சட்ட ...
Read More »செய்திமுரசு
மோடி விடுத்த கோரிக்கையில் ஆஸ்திரேலியா சிலைகள் கிடைத்தன!
ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும், பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ...
Read More »ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு கோத்தாபயவிற்கு உதவுதல்?
திசராணி குணசேகர தமிழில் ரஜீபன் என்;னிடம் இரண்டு குழுக்களே உள்ளன, பயங்கரவாதத்திற்கு எதிராக போராட விரும்புவர்களும் பயங்கரவாதிகளுமே அவர்கள். நீங்கள் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடுபவர்களா? -பிபிசி பேட்டியின் போது கோத்தாபய 2015 இல் பெரும்பான்மையான இலங்கையர்கள் ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.அந்த ஜனநாய சூழலை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக நாங்கள் வாக்களிக்கவேண்டுமா? அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதற்கு நாங்கள் விரும்பாமலே துணை போகப்போகின்றோமா? 2018 இல் இடம்பெற்ற சிறிசேன-மைத்திரி சதிமுயற்சியின் போது மகிந்த ராஜபக்ச சிறிசேனவிற்கு நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்து தேர்தல்களிற்கு ...
Read More »அவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு!
அவுஸ்திரேலியா நாட்டின் பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டின் கிழக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் மூன்று நாட்களில் மோசமான காட்டுத்தீ காரணமாக குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் அவுஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று மிக மோசமான தாக்கம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு மாநிலங்களிலும் 120 க்கும் மேற்பட்ட பற்றை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ...
Read More »திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கினார்!
இந்தியாவில், ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப். இவர் ஒரு தொழில் அதிபரின் மகனாவார். வசதியாக வாழ்ந்து வந்த இவர் ஒரு மென்பொறியியலாளராவார். இந்நிலையில், சொந்தக்கார பெண்ணுடன் இவருக்கு கடந்தமாதம் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில், நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மாப்பிள்ளை அறைக்கு சென்று ஆயத்தமாகிகொண்டு வருகிறேன் என்று சென்றவர், அவர் அறையை விட்டுவெளியே வரவே இல்லை… ...
Read More »14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. 14 பிரதிநிதிகளை அடங்கிய இக் குழுவில் ஆறு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி மூன்று இந்தியர்கள், மூன்று இந்தோனேஷியர்கள், இரண்டு தென்னாபிரிக்கர்கள், இரண்டு பூட்டானியர்கள், இரண்டு பங்களாதேஷியர்கள் மற்றும் இரண்டு மாலைத்தீவினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஒரு குழுவினர் நாளை இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை !
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த இந்திய மத்திய அரசின் உத்தரவை டெல்லி நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீடிக்கப்பட்டு வந்தது. அதற்கமைய கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டது. அதேநேரம் இந்த ...
Read More »சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன!
அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன் இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான, அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க – கோழைத்தனமான பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன். இதன் மூலம் ...
Read More »அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ; மூவர் பலி!
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து பிராந்தியங்களில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 3 பேர் பலியானதுடன் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேற்படி பிராந்தியங்களில் 100 க்கு மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இரு மாநிலங்களிலும்இந்தத் தீயை அணைக்க போராடிவரும் சுமார் 1,300 தீயணைப்புப் படைவீரர்களுக்கு உதவ இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளார். அவர் இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்தில் ...
Read More »2009 இல் இடம்பெற்ற இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி
2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாகவும் 15 மில்லியன் டொலர் நிதி வரவேண்டியிருந்தும் வெறுமனே 3 மில்லியன் டொலர் மட்டுமே இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தது. ஏனைய பணத்தொகை என்னவானது என்பது தொடர்பில் கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். அவர் இதில் கூறியதாவது. கடந்த காலங்களில் கிரிக்கெட் சபையில் ...
Read More »