இலங்கையில் தமிழ்பேசும் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள், வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடைபெற்று 20தினங்களை கடந்துள்ள நிலையில், அது தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமானது பல்வேறு இடறுபாடுகள், அடக்குமுறைகளை மீறி நடைபெற்றதானது தெற்கிலும், சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உரக்கச்சொல்லியிருக்கின்றதே உண்மையான விடயமாகும். சிங்களப் பேரினவாத சக்திகள் இந்த பொத்துவில் ...
Read More »செய்திமுரசு
நிறவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரியும், அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினர். இதற்கான காரணத்தை வெளியிடாமல் மவுனம் சாதித்து வந்த அவர்கள், சமிபத்தில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரேயின் நிகழ்ச்சியில் அதை வெளியிட்டனர். குறிப்பாக இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் அனுபவித்த சவால்களை அவர்கள் வெளிப்படுத்தினர். அதாவது, திருமணமான புதிதில் அரச குடும்பத்தில் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், இதனால் மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டதாக மேகன் அதிர்ச்சி குற்றச்சாட்டை ...
Read More »இறுதி அறிக்கையின் மேலும் 22 பகுதிகள் கையளிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின், மேலும் 22 பகுதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீரவினால் அறிக்கையின் பாகங்கள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 87 பாகங்களைக் கொண்டதாகும். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பாகங்கள் கடந்த 2 ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
Read More »புதிய வகை வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம்
தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த வகையிலான வைரஸ் தற்சமயம் தென்னாபிரிக்க நாட்டில் பரவிவருகின்றதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் தன்சானியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Read More »ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை
குவாட் கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2007-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலேயே இதுவரை பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்தநிலையில், முதல்முறையாக தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் ...
Read More »ஜெனீவா மைய அரசியல் அல்லது வெளியாருக்காக காத்திருத்தல்
46 ஆவது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னும் பின்னுமாக தாயகத்திலும் டயஸ்போராவிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஜெனிவாவை மையமாகக் கொண்டு ஒரு போராட்டச் சூழல் தாயகத்திலும் டயஸ்போராவிலும் சிறிதளவுக்கு தமிழகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே கூடிக் கதைத்து புதிய கூட்டணிகளை உருவாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் ஊடகங்கள் உருப்பெருக்கி சூடாக்கி விற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஜெனிவாவை நோக்கி ஒரு கொதிநிலை உருவாக்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியல் ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் இக்கட்டுரை பின்வரும் அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. ...
Read More »பத்திரிகையாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்த தாய்லாந்துப் பிரதமர்
தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்றுப் புதன்கிழமை தலைநகர் பாங்கொக்கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் விரக்தியடைந்த அவர், கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் தனது கையில் இருந்த கிருமிநாசினியை(சனிடைசர்) பத்திரிகையாளர்களின் முகத்துக்கு நேரே தெளித்தவாறு புறப்பட்டுச் சென்றார். பத்திரிகையாளர்களுடன் கோபமாகப் பேசியதுடன், அவர்கள் கூறுவதை காது கொடுத்துக் கேட்காமல் சென்றுவிட்டார். அவரது இந்தச் செயற்பாட்டை பார்த்து பத்திரிகையாளர்கள் திகைத்தனர். பிரதமர் பிரயுத் ...
Read More »60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக் கை எதிர்வரும் சனிக்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் அடுத்தகட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப் பூசியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றால் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகமாக உயிரிழப்பதாகத் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனை கருத்திற்கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பதில் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Read More »சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற இருவர் கைது
சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்று இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். போலி கடவுச் சீட்டு மற்றும் போலி விசாவை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் உட்பட இருவர் இன்று அதிகாலை கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
Read More »ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய அகதியின் கதை
ஈரானிய அகதியான Ebrahim Obeiszade கடைசியாக பணியாற்றி 8 ஆண்டுகள் கடந்து விட்டன. தெற்கு ஈரானில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றிய அவரின் வாழ்க்கை இன்று ஆஸ்திரேலியாவில் வேறொரு கோணத்தில் உள்ளது. ஈரானில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஆஸ்திரேலியாவை நோக்கி கடல் பயணத்தை மேற்கொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளை தடுப்பு முகாம்களிலேயே/தடுப்பிலேயே கழித்திருக்கிறார். இவ்வாறான அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசிடம் ஏற்பட்ட திடீர் எண்ண மாற்றத்தால் இவர் 6 மாத தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக, கடந்த ஜூலை ...
Read More »