கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த இளைஞர் விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தற்கொலை மூலமாக போராடுவது சரியான வடிவமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார், யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் தெரிவித்தார். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு ...
Read More »செய்திமுரசு
உதிரிபாகம் எம்.எச்.370 விமானத்தினுடையது- அவுஸ்ரேலியா உறுதி
தான்சானியா தீவு ஒன்றில் கரையொதுங்கிய விமான இறக்கையின் பாகம் மாயமான மலேசிய எம்.எச்.370 விமானத்தினுடையது என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் வியாழனன்று தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் தான்சானியாவின் பெம்பா தீவுகளில் கடற்கரையில் ஒதுங்கிய இந்த உதிரிபாகத்தை அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் அடையாளம் கண்டனர். இதனை ஆராய்ந்த அவுஸ்ரேலியா போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் இந்த பாகம் எம்.எச்.370 விமானத்தினுடையதே என்று உறுதி தெரிவித்துள்ளனர். மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய அன்றைய தினத்திலிருந்து இந்தியப் பெருங்கடலின் பல்வேறு கடற்கரைகளில் சில பாகங்கள் ஒதுங்கியது மாயமான ...
Read More »அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹிக்
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கிரேம் ஹிக் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக டேரன் லேமென் உள்ளார். இவருடன் பீல்டிங் பயிற்சியாளராக கிரேக் ப்ளேவெட் உள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக சமீபத்தில் டேவிட் சாஹெர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கிரேம் ஹிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் அவுஸ்ரேலியா சென்று டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அப்போது இருந்து அவர் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார். ...
Read More »இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க நீதிபதி பதவி
நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் டயான் குஜராத்தியை நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளிப்பெண் டயான் குஜராத்தி (வயது 47). இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நியூயார்க் தென் மாவட்ட அரசு வக்கீல் அலுவலகத்தின் குற்றப்பிரிவு துணைத் தலைவர் பதவியில் உள்ளார். இவரை நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதுபற்றிய உத்தரவில் அவர், “அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாவட்ட நீதிபதி பதவியில் ...
Read More »அவுஸ்திரேலிய லிபரா நிறுவனத்தை கையகப்படுத்தியது வொடபோன்
அவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் லிபராவின் MVNO சேவையை பிரித்தானியாவின் வொடபோன் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்தே அவுஸ்திரேலியாவில் லிபரா மொபைல் சேவை செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் முதற்கொண்டு 4ஜி சேவையையும் வழங்கி வருகிறது. லிபராவின் அனைத்து சேவைகளையும் வோடபோன் வாயிலாகவே அவுஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு லிபரா வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் அவுஸ்திரேலியாவில் செயல்பட்டுவரும் லிபராவின் மொபைல் சேவையை கையகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த கையகப்படுத்தலால் கைமாறப்பட்ட பொருளாதார தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வோடபோன் கையகப்படுத்தியிருந்தாலும் லிபரா ...
Read More »பசியோடு அவனிருந்த நாட்களில் குசியாய் கும்மாளம்
வணக்கம் புத்திஜீவிகளே…! நான் நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். Jaffna International Cinema Festival 2016 யாழ்ப்பாண சர்வதேச சினிமா விழா 2016 மேற்குறித்த தலைப்பிடப்பட்ட விழாவானது யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக இம்மாதம் 23 – 27 வரையான திகதிகளில் இடம்பெறவுள்ளமையை செய்திகளில் படித்து அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நீண்டதொரு போரில் அனைத்துவிதமான இழப்புக்களையும் சந்தித்து, அது தந்துபோன வடுக்களை மறைத்தபடி இறுகி வாழும் சமூகத்தினர் மத்தியில் இதுமாதிரியான விழாக்கள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. குறிப்பிட்டதொரு தொகுதியினர் மத்தியிலாவது சற்று மன ஓய்வைத் ...
Read More »பாரிசில் மாவைக்கு எதிர்ப்பு
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள இளைஞர்கள் கண்ணீர்ப்பு புகைத் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குத் எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த இளைஞர்கள் குறித்த செயலில் ஈடுபட்டதாக பாரிசில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவைக்குத் எதிர்ப்புத் தொிவித்து இளைஞர்கள் ஏற்பாட்டாளர்ளுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். தர்க்கத்தின் இறுதியில் மிளகாய் மற்றும் மிளகு ஸ்பிறே கலந்த கண்ணீர் புகை பிரயோகத்தை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீது பிரயோகித்ததை ...
Read More »வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற நாமல்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »ஆற்றல் மிக்க பெண்மணிகள்- அருந்ததி பட்டாச்சார்யா, சந்தா கோச்சார்
பார்ச்சூன் பத்திரிகை, அமெரிக்காவிற்கு வெளியே வணிக உலகில் ஆற்றல் மிக்க பெண்மணிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை, நடப்பு 2016-ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கு வெளியே 19 நாடுகளில் வணிக துறையைச் சேர்ந்த 50 ஆற்றல் மிக்க பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேங்கோ சான்டான்டர் நிறுவன தலைவர் அனா போடின் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அரசு நிறுவனமான பாரத ஸ்டேட் ...
Read More »உடல் முழுவதும் பச்சை குத்திய அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை
அமெரிக்காவில் 67 வயதான பெண் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும் அதாவது 91.5 சதவீதம் பச்சை குத்தியுள்ளார். இதன்மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீனியர் சிட்டிசன் ஆன இவர் உடலில் பல டிசைன்களில் பச்சை குத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Read More »