உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள இளைஞர்கள் கண்ணீர்ப்பு புகைத் தாக்குதல் நடத்தியிருந்தார்கள்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குத் எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த இளைஞர்கள் குறித்த செயலில் ஈடுபட்டதாக பாரிசில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவைக்குத் எதிர்ப்புத் தொிவித்து இளைஞர்கள் ஏற்பாட்டாளர்ளுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். தர்க்கத்தின் இறுதியில் மிளகாய் மற்றும் மிளகு ஸ்பிறே கலந்த கண்ணீர் புகை பிரயோகத்தை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீது பிரயோகித்ததை அடுத்து நிகழ்வு நிறுத்தப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் 40 பேர் வரையில் மயக்கமடைந்து, கண் எரிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தாக மேலும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிக்கின்றன.
https://www.facebook.com/pathivumedia/videos/834791733323636/
Eelamurasu Australia Online News Portal