இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை ரூபாவாக 180 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 179 ரூபா 4 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க ...
Read More »செய்திமுரசு
மஹிந்த அணி இல்லாது வாக்கெடுப்பு நிறைவேற்றம் – 121 பேர் ஆதரவாக வாக்களிப்பு!
நாடாளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதையடுத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மன்றில் அறிவித்திருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக தற்போது நாடாளுமன்றில் நடத்தப்பட்ட இலத்திரனியல் வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளவர்களே அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதற்காக ...
Read More »ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல்: வானம் நிறம் மாறியது – பொது மக்களுக்கு எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல் காரணமாக வானம் நிறம் மாறியது. இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக (செம்மஞ்சள் நிறமாக) மாறியது. 500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. சிட்னி தொடங்கி பல நகரங்கள் புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டன. காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்பட பல பகுதிகளில் சாலைகளே கண்களுக்கு ...
Read More »நிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு!
நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். ...
Read More »குடியுரிமை பெறுவதற்காக அரங்கேறுகிறது போலி திருமணங்கள்!
குடியுரிமைக்காக போலி திருமணங்கள் செய்துகொள்ளும் தெற்காசிய மக்களுக்கு அவுஸ்திரேலியா உயர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற 4 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவர்களுக்கு திருமணம் மூலம் குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளது. இச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக 32 வயதான இந்தியரை அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சிட்னியில் கைது செய்தனர். இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக 164 பேரின் பார்ட்னர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நிரந்தர முகவரி கிடையாது ...
Read More »இராஜதந்திரிகளை சந்திக்கின்றார் மகிந்த!
மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார் சிறிலங்காவில் அரசியல் சூழ்நிலை தொடர்பில் இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விசனம் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Read More »மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்கள் மீட்பு!
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்களை மீட்டுள்ளதாக் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மன்னார் மனித புதைகுழியே மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார். எலும்புகள் சிதறிக்கிடக்கின்றன இதன் காரணமாக முழு உடலின் அமைப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். சில எலும்புகளை காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித எச்சங்களிற்கு அப்பால் குழியிலிருந்து பீங்கான்கள் உலோகப்பொருட்கள் போன்றவற்றையும் மீட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
Read More »ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அவுஸ்திரேலிய அகதியாம்!
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அகதி தானென்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet தெரிவித்துள்ளார். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் Michelle Bachelet 70 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளரின் பிடியிலிருந்து வெளியேறினார். 1975 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக புகலிடம் கோரி வந்த நிலையில் பின் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பல காலம் வாழ்ந்தார். இவர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய போது அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை மிக நெகிழ்சியுடன் இருந்ததாக கூறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா தற்போது ...
Read More »மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை – நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதளவு பயணப் பாதையையும் தொலைவையும் ...
Read More »ஏமனில் பசியால் உயிரிழந்த 85,000 குழந்தைகள்!
ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போரில் பசி காரணமாக 85,000 குழந்தைகள் இறந்துள்ளதாக முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான ‘சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏமனில் கடந்த 3 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பசி காரணமாக இறந்துள்ளனர். மேலும் அங்கு பலர் மோசமான நெருக்கடிக்களுக்கு ஆளாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 80 லட்சம் பேர் உணவின்றிப் பரிதவிக்கின்றனர் என்று ஐ.நா. சபை ...
Read More »