செய்திமுரசு

அவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா?

மக்கள் தங்களுக்குள், “சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி இறந்து விட்டார்” என நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. அது போலவே, இம்மாதம் எட்டாம் திகதி, யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் (தமிழரசுக் கட்சித் தலைவர்) மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. படை முகாம்கள் அமைப்பதற்கு, மக்களின் காணிகளை அப(சுவீ)கரிப்புச் செய்ய முடியாது என, அங்கு, அவர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ...

Read More »

சந்தேகத்தின் பேரில் சிரிய நாட்டுப் பிரஜை கைது!

இலங்கையில் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரிய நாட்டுப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என, ராய்டர் செய்திச் சே​வை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணை நடவடிக்கைகளுக்காக  விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Read More »

தாக்குதல்கள் இடம்பெறலாமென காவல் துறை தலைமையகம் எச்சரிக்கை!

நாட்டில் சகல காவல் துறை  பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தொடர்ந்து தாக்குதல்தாரிகளால் தாக்குதல்கள் இடம்பெறாமென,  காவல் துறை தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவகையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, காவல் துறை தலைமையகம் சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது.

Read More »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள் சில அவசரகால சட்டத்தின் கீழ்…!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள சில, அவசரகால சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலினூடாக இன்று(22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது. தேசிய பாதுகாப்புச் சபையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடத்திய அவசரச் சந்திப்பிலேயே ஜனாதிபதி இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

Read More »

தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர் !

இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல் துறை பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த 26 பேரில்  சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், ...

Read More »

கொச்சிக்கடையில் வெடிப்பு சம்பவம்!

கொச்சிக்கடை பகுதியில் சற்றுமுன்னர் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் கிடைக்கப்பெற்ற பொதியொன்றை பரிசீலனை செய்வதற்காக எடுக்க முற்பட்ட போதே, குறித்த பார்சல் வெடித்து சிதறியுள்ளது.

Read More »

கொழும்பு புறக்கோட்டையில் வெடிபொருட்கள் மீட்பு!

நேற்று 8 இடங்களில், இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில், சுமார் 290 பேர் மரணித்துள்ளதாகவும், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே நாடு முழுவதும் பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு புறக்கோட்டை, பெஸ்தியான் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து, 87 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்கள் சிலவற்றை  மீட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

Read More »

பாகிஸ்தான், இந்தியப் பிரஜைகள் 12 பேர் கைது!

நேற்று (21) இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில், பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேரும் இந்தியப் பிரஜைகள் மூவரும் அடங்குவதாகவும் இந்தியப் பிரஜைகள், வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டதாகவும் காவல் துறையினர்  தெரிவித்தனர். அவிஸாவலை பிரதேசத்திலுள்ள செப்புக்கம்பி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில், இவர்கள் பணியாற்றியுள்ளார்கள் என்று, காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறையினர்  மேலும் கூறினர்.

Read More »

கொழும்பின் 6 தாக்குதல்களும் தற்கொலை தாக்குதல்கள் என உறுதி!

கொழும்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 8 தாக்குதல்களுள் 6 தாக்குதல்கள் தற்காலை குண்டு தாக்குதல் என அரச பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம்  மற்றும் ஷங்கரில்லா, சினமன் கிரேண்ட், கிங்ஸ்பெரி ஹொட்டல் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு ...

Read More »

அவுஸ்ரேலியர் ஒருவர் காயம்!

சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியர்கள் எவரும் நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் உயிரிழக்கவில்லை என்று அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார்.

Read More »