இஸ்ரேல் பாலத்தீன எல்லையில் நடந்துவரும் மோதலின் போது இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச சென்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 21 வயதான பெண் தன்னார்வலரான ரஸன் அல்-நஜார் (Razan al-Najjar, ) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தநிலையில் யுத்தம் நடைபெறும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »செய்திமுரசு
ஜூன் 03: அவுஸ்திரேலியாவில் மாபோ நாள்!
மாபோ எதிர் குயின்ஸ்லாந்து (Mabo v Queensland) என்பது அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும். 1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டது. தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த அவுஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின் மறி ...
Read More »பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜி.எல் பீரிஸ்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்துக்குள் கோத்தாபய பசில் ராஜபக்ச சமல் ராஜபக்ச ஆகியோர் தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ...
Read More »பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும்! – கலாநிதி தீபிகா உடகம
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையானது புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் தேவையின் பொருட்டே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்திருந்தார். குறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.எனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் அரச பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சர்வதேச மனித உரிமைகள் ...
Read More »திட்டமிட்டு பறி போகும் முல்லைத்தீவு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் நாயாற்றுப் பாலத்திலிருந்து, கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தை தொல்பொ ருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். தொல்பொருள் திணைக்களத்துக்கு என்று அடையாளப்படுத்தும் நடுகல் அங்கு நேற்று முன்தினம் நடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வாடி அமைத்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறத்தில் மகாவலி எல் வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் ...
Read More »ஆஸ்திரேலியா – இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கை!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே உள்ள திமோர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பு, மற்றும பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் ஆட்கடத்தல் உள்ளிட்ட செயல்களைக் கண்காணிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய எல்லைப் படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, இந்தோனேசிய கடல் மற்றும் மீன்பிடி விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் உள்ளடங்கிய முத்தரப்பு ரோந்து நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகின்றது. ஆப்ரேஷன் கன்னெட் (Operation Gannet) என அழைக்கப்படும் இந்நடவடிக்கையில் ரோந்து படகுகள்/ கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதே ...
Read More »ஆனந்த சுதாகரனின் மனைவியை கொன்றது அரச பயங்கரவாதமே!
பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ...
Read More »ஒருவரின் மரணத்திற்கு பின்னரும் பிரியாத கார்!
பல ஆண்டுகளாக தான் பயன்படுத்திய காரை மரணத்திற்கு பின்னரும் தான் பிரியக்கூடாது என விருப்பப்பட்ட நபரின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வைத்துள்ளனர். சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த காரை தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த இவர், மரணத்திற்கு பின்னரும் தன்னுடைய கார் பிரியவே கூடாது என தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை குய் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். குய்-யின் விருப்பத்தின் படி, அவரது குடும்பத்தினர் சடலத்தை காரில் வைத்து பெரிய ...
Read More »5வது நாளாகவும் தொடரும் அகழவுப் பணி!
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள லங்கா சத்தொச நிறுவன வளாகத்தில் மனித எச்சங்களை தேடி மேற்கொள்ளப்படும் அகழவுப் பணிகள் 5வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜாவின் முன்னிலையில் இந்த பணிகள் இன்றும் இடம்பெற்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான அகழ்வு பணிகள் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை மனித எலும்புகள், பற்கள்,தடையப்பொருட்களான பொலித்தீன் பக்கற்,போத்தல் மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Read More »சிறிலங்காவிற்கு பெருமளவான முதலீடுகளை வழங்கியுள்ள சீனா!
சீனாவின் ‘கடன்வலை ராஜதந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் முதலீட்டு வேலைத்திட்டங்களை மையப்படுத்தி, அமெரிக்காவின் சட்டவாக்குனர்கள் சிறிலங்கா விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான பெருமளவான முதலீடுகளை சீனா வழங்கியுள்ளது. எனினும் இதன் மூலம் சிறிலங்காவின் தமது கடன்பொறியில் சிக்கவைக்கும் ராஜதந்திரத்தை சீனா கையாள்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்துகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின் களநிலவரங்களை ஆய்வு நோக்கில் அமெரிக்காவின் அதிகாரமிக்க சட்டவாக்குனர்கள் குழு ஒன்று சிறிலங்கா வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து ...
Read More »