அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டிக்காக டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டமிட்டு உள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ந்திகதி புனேவில் தொடங்கியது. சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்தன. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். அவுஸ்ரேலிய அணி இந்திய மண்ணில் 2004-ம் ஆண்டுக்கு ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்
இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி பிப்ரவரி மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 17-ந்திகதியும், 2-வது போட்டி 19-ந்திகதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்கிறது. 23-ந்திகதி அவுஸ்ரேலியா இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. 22-ந்திகதி போட்டியை முடித்துக் கொண்டு 23-ந்திகதி இந்தியாவிற்கு அவுஸ்ரேலிய அணி வருவதற்கு வாய்ப்பில்லை. இதனால் டி20 அணிக்கு முற்றிலும் ...
Read More »கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!
பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா் என இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் கடந்த வாரம் தெரிவித்த கருத்து அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்என். நிபோஜன் எனும் பெயரில் வெளிவந்த குறித்த செய்தியை அடிப்படையாக கொண்டு ஊடகவியலாளாருடன் தொலைபேசி மூலம் நேற்று வெள்ளிகிழமை 30-12-2016 முற்பகல் தொடா்பு கொண்ட இனம் தெரியாத நபா் ஒருவா் குறித்த செய்தியை ஊடகவியலாளா்கள் கருத்து திரிபுபட எழுதி விட்டாா்கள் என்றும் சில வேளை அமைச்சா் தடுமாறி தவறாக உச்சரித்தாலும் அதனை ...
Read More »அவுஸ்ரேலியா: தாயின் கார் சக்கரத்தில் சிக்கி 7 மாத குழந்தை பலி!
அவுஸ்ரேலியாவில் ஒரு பெண் ரிவர்ஸ் எடுத்த கார் சக்கரத்தில் சிக்கி 7 மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள குவீன்ஸ்லாந்து அருகாமையில் வுட்ரிட்ஜ் என்ற பகுதியில் தனது 7 மாத குழந்தை தள்ளுவண்டியில் இருப்பதை கவனிக்காத அந்தப் பெண், காரை திருப்புவதற்காக பின்பக்கமாக செலுத்தியுள்ளார். வேகமாக பின்னால் வந்த காரின் சக்கரத்தில் தள்ளுவண்டியுடன் சிக்கிய அந்தக் குழந்தையை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் அன்றிரவு நிகழ்ந்த இந்த ...
Read More »அவுஸ்ரேலியா: இசை நிகழ்ச்சியில் 80 பேர் காயம்!
அவுஸ்ரேலியாவில் புத்தாண்டு விழாவை கொண்டாடிய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவுஸ்ரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள லோர்னே நகரின் கிராண்ட் கலையரங்கத்தில் புத்தாண்டையொட்டி, இசை மற்றும் கலைவிழா நிகழ்ச்சிகள் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு நடைபெற்றன. இவ்விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்திரளாக கூடியிருந்தனர். அவுஸ்ரேலியாவின் பிரபல இசைக்குழுவினரின் நிகழ்ச்சி முடிந்தவுடன், அருகாமையில் உள்ள மற்றொரு மேடையில் பிரிட்டன் நாட்டின் மிகப்பிரபலமான ‘லண்டன் கிரம்மர்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போது ஆர்வமிகுதியால் கூட்டத்தில் இருந்த ...
Read More »இரட்டை சதத்தால் 6-வது இடத்திற்கு முன்னேறினார் அசார் அலி
மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி இரட்டை சதம் அடித்தார். இதனால் டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 205 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்த அவர், ...
Read More »ஒருநாள் தொடரில் ஸ்மித்துதான் என் இலக்கு
அவுஸ்ரேலியாவின் ஆடுகளத்தை பயன்படுத்தி நல்ல பாஃர்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவதே என் இலக்கு என பாகிஸ்தான் வீரர் இர்பான் சொல்கிறார். பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் அவுஸ்ரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 13-ந்திகதி தொடங்குகிறது. இதுகுறித்து மொகமது இர்பான் கூறுகையில் ‘‘நான்தான் மிகவும் அதிக உயரம் கொண்ட பந்து வீச்சாளர். பவுன்சருக்கு சாதகமான ஆஸ்திரேலியாவின் ...
Read More »2017 புத்தாண்டை வரவேற்ற அவுஸ்ரேலியா
உலக நாடுகளில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது அவுஸ்ரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு 12.00 மணியாகும். இந்த நேரத்தில் அங்குள்ள மக்கள் கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்றனர். இதேபோல் ...
Read More »கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை!
இந்திய இலங்கை மீனவர்கள் தொழிலின் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அனுமதிக்கப்பட்ட கச்சதீவில் இலங்கை கடற்படை அமைத்துள்ள தளத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வகையில் வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் பக்தர்கள் ஏற்றி இறக்கப்படுவது சிரமமான ஒன்றாக காணப்படுகிறது. இதனையடுத்து, ...
Read More »அவுஸ்ரேலியாவில் மதுபான பாவனைக்கு தடை?
அவுஸ்ரேலியாவின் பிரபலமான சிட்னி கடற்கரைப் பகுதியில் கோடை காலம் முழுவதும், மதுபான பாவனை தடை செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மட்டும் சிட்னி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 தொன்னுக்கும் மேற்பட்ட குப்பைகூழங்கள் குவிந்தமையை அடுத்தே, இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கிறிஸ்மஸ் அன்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறித்த கடற்கரைப் பகுதியில் தமது நேரத்தை செலவழித்ததோடு மட்டுமல்லாது, பெருந்திரளான போத்தல்கள், சிகரெட் பக்கற்றுக்கள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்களை விட்டுச் சென்றுள்ளனர். இந்நடவடிக்கையை ‘இழிவான செயல்’ என வர்ணித்துள்ள ரன்விக் (Randwick) நகரபை, இதன் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal