மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி இரட்டை சதம் அடித்தார். இதனால் டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 205 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்த அவர், 2-வது இன்னிங்சில் 43 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் சிறந்த டெஸ்ட் தரவரிசை ஆகும்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 875 புள்ளிகளுடன் விராட் கோலி 2-வது இடத்திலும், ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், 817 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் 4-வது இடத்திலும், 790 புள்ளிகளுடன் டேவிட் வார்னர் 5-வது இடத்திலும் உள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal