செய்திமுரசு

விஷ ஊசி ஏற்றியதிற்கு ஆதாரம் இல்லையாம் – சுமந்திரன்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 100 பேருக்கு அதிகமானோர் இந்த விஷ ஊசி விடயத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமற்போனவர்களின் நினைவுநாள்

1990 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்கள் காணாமற்போனதன் நினைவுநாள் நிகழ்வொன்று இன்று(5) நடைபெற்றது. காணாமற்போனவர்களுக்காக, செங்கலடி – கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் 25  வருடங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Read More »

அவுஸ்ரேலிய ஊடகத்தால் வெளியான இரகசியகசிவு பற்றி இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை

ஜி20 மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரான்ஸ் அதிபர் பி்ரான்காய்ஸ் ஹாலண்டேவை பிரதமர் மோடி  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் இருநாட்டு உறுவுகளை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த பேச்சுவார்த்தையில் ஸ்கார்பின் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசிய ஆவணங்கள் வெளியானது தொடர்பாக ஹாலண்டேவிடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரம் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தியக் கடற்படைக்காக பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனம் 6 ‘ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் ...

Read More »

அகதிக்காக தன்னுடைய குடியுருமையை வழங்க முன் வந்த அவுஸ்ரேலியா பிரஜை

அவுஸ்ரேலியாவின் முன்னாள் நீதிபதிகளில் ஒருவரும் member of the Order of Australia விருது பெற்றவருமான Dr Jim Macken புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக வித்தியாசமான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். நவுறு அல்லது மனுஸ் தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்குப் பதிலாக தான் அங்கே போய் வாழ்வதாகவும் தன்னுடைய குடியுரிமையை அந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு வழங்கி அவரை அவுஸ்ரேலியாவில் வாழ அனுமதிக்குமாறும் கோரி 88 வயதான Dr Jim Macken குடிவரவு அமைச்சர் Peter Dutton க்கு கடிதம் எழுதியுள்ளார். இது தனது மனப்பூர்வமான கோரிக்கை என்றும் ...

Read More »

இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி

இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. வார்னர் சதம் அடித்து அசத்தினார். இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகெலேயில் இன்று நடைபெற்றது. இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் விக்கெட் கீப்பர் சண்டிமால் கப்டன் பதவியை ஏற்றார். டாஸ் வென்ற சண்டிமால் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் ...

Read More »

அவுஸ்ரேலியாவிடம் இருந்து இந்தியா கோப்பையை வென்றது

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற நாற்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று அவுஸ்ரேலியா ஏ அணியை 57 ரன்களில் வீழ்த்தி மணீஷ் பாண்டே தலைமை இந்தியா ஏ அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக கோப்பையை வென்ற்து இந்தியா ஏ அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய அவுஸ்ரேலியா ஏ அணி 209 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா ஏ ஸ்பின்னர்கள் யஜுவேந்திர ...

Read More »

அகதிகள் செயற்பாட்டாளருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அபராதம்

இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடுகடத்துவதற்கு எதிராக வானூர்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளருக்கு 3500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் நீதவான் நீதிமன்றம் ஒன்றினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ‘த கார்டியன்’ செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நாடுகடத்த முயற்சிக்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஜெஸ்மின் பில்ப்ரோவ் என்ற அகதிகள் செயற்பாட்டாளர் அதற்கு எதிராக வானூர்தியில் அமர மறுத்து எதிர்ப்பினை வெளியிட்டார். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் வானூர்தியில் இருந்த மேலும் சில ...

Read More »

அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம்

அன்னை தெரசாவுக்கு இன்று(4) வாடிகன் நகரில் நடக்கும் பிரமாண்ட விழாவில் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த இவர், கருணையின் வடிவமாக திகழ்ந்தார். அல்பேனியாவில் 1910, ஆக., 26ம் தேதி பிறந்தார் தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ. இளம் வயதிலேயே சமூக சேவையில் ஆர்வமாக இருந்தார். 18-வது வயதில் ‘சிஸ்டர்ஸ் ஆப் லொரேட்டோ’ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார். 1929ல் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ...

Read More »

இன்று நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு  இன்று செப்டெம்பர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெறுகின்றது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

Read More »

ஈழ புகலிட கோரிக்கையாளர் நாடு கடத்தக்கூடாது-சிட்னியில் ஆர்ப்பாட்டம்

ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து நாடு கடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »