ஜி20 மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரான்ஸ் அதிபர் பி்ரான்காய்ஸ் ஹாலண்டேவை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் இருநாட்டு உறுவுகளை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் ஸ்கார்பின் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசிய ஆவணங்கள் வெளியானது தொடர்பாக ஹாலண்டேவிடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரம் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படைக்காக பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனம் 6 ‘ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தக் கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபரிடம் ஸ்கார்பின் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசிய ஆவணங்கள் வெளியான விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal