செய்திமுரசு

“ஒரே நாடு, ஒரே சட்டம்” -கருத்துக்களை கேட்டறிந்தது

“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. நேற்று (25) முற்பகல் மாத்தளை மாவட்டச் செயலகத்துக்கும் பிற்பகல் கண்டி மாவட்டச் செயலகத்துக்கும் வருகை தந்த மாகாண மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள், செயலணியிடம் கருத்துக்களைத் தெரிவித்தனர். வருகை தந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்த குழுவின் தலைவர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதியின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுள்ளதுடன், குறித்த காலத்துக்கு முன்னதாகவே குழுவின் அறிக்கையை ...

Read More »

இனப்படுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள், காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை’- தமிழ் செயற்பாட்டாளர்

“(ஆஸ்திரேலியாவின்) இந்த உணர்வற்ற செயலை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இஇமபடுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள். இம்மக்கள் நிஜமான மனித உயிர்கள், வீடியோ கேம் அல்ல. அவர்களுக்கு உதவ வேண்டியது, ஆபத்தான சூழலுக்கு திருப்பி அனுப்பாமல் இருக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை. இந்த கொடூரமான கொள்கைகள் முடிவுக்கு வர வேண்டும்,” என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தமிழ் செயற்பாட்டாளர் தமிழ் கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறி வரும் நிலையில் இப்படியொரு பிரச்சார செயலை ஆஸ்திரேலியா இலங்கையுடன் இணைந்து ...

Read More »

இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்!

பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரம் பேர் வரையில் கொல்லப் பட்டிருந்தனர். இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது ...

Read More »

மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் ஏவியது நாசா

இந்த தொலைநோக்கியால் நட்சத்திரங்கள் மற்றும் கிரக அமைப்புகள் எவ்வாறு உருவாகின மற்றும் அண்ட சராசரம் குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க முடியும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம்  இணைந்து உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை உருவாக்கி உள்ளன. பூமி தனித்துவமானதா? பூமியைப் போன்ற கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கான ஆய்விற்கு, வானியலாளர்கள், ...

Read More »

ஐ.நா வரவு – செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் …

ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுவருகின்றது. இவ்வரவு, செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய பாதுகாப்புச்சபை உறுப்புரிமை நாடுகளும் இலங்கையும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும் அவற்றின் முயற்சிகளைத் தோற்கடித்து மனித உரிமைகள்சார் செயற்திட்டங்களுக்கு உரியவாறு நிதியொதுக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ...

Read More »

யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

யாழில் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை காவல் துறையால்  கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 09ஆம் திகதி காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் , கோவில் நிர்வாகத்தினரால் காங்கேசன்துறை காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களில் தெல்லிப்பளை , பலாலி உள்ளிட்ட வலி வடக்கில் உள்ள நான்கு ஆலயங்களில் பிள்ளையார் சிலை உள்ளிட்ட சிலைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல் துறைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. தொடர்ந்து இந்து ...

Read More »

தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடர் என்ற அடையாளத்தை வலியுறுத்தியவர் பெரியார். இன்று அவரே தாய்மொழியின் அடிப்படையில் தமிழரா என்ற கேள்விக்கு ஆளாகி நிற்கிறார். அந்தக் கேள்விக்குப் பதிலாக, பெரியார் தமிழ், தமிழர் உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்களும் ஆற்றிய பணிகளும் நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், பத்திரிகையாளர் ப.திருமாவேலன் ஏறக்குறைய 1,600 பக்க அளவில் எழுதி, நற்றிணை பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கும் ‘இவர் தமிழர் இல்லை என்றால் வேறு எவர் தமிழர்?’ என்ற தலைப்பிலான புத்தகம் ...

Read More »

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஓர் அகதி முகாமின் பின்கதவு புன்னகைகள்!

“உன்னைப் பற்றிக் கேட்ட கேள்வி எதுக்குமே நான் தெரியாது எண்டுதான் சொன்னனான் ராதா. நீ பயப்படாத. நீ கட்டாயம் வெளியில போயிருவாய். குழந்தையோட தனியா உள்ளுக்க வெச்சிருக்க மாட்டங்கள்.” மெல்போர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் வந்திருந்த நீதனைப் பற்றி மாத்திரமன்றி, சகல அகதிகளினதும் தலையில் புள்ளிவைத்து சித்திரம் வரைந்து, அவர்களின் பூர்வீகம், நட்சத்திரம் முதற்கொண்டு அனைத்தையும் தகவல்களாகச் சேகரித்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறை. வெவ்வேறு முகாம்களில் வந்திருந்தவர்களின் படங்களைக் காண்பித்து, `இவரைத் தெரியுமா?’ – என்ற கணக்கில் ஏராளம் கேள்விகளைக் கொட்டி விசாரணைகளை ஆரம்பித்தார்கள். போரிலிருந்து ...

Read More »

மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதியரசர்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்  அவர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமணம் செய்து கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன, ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று, சட்டுத்துறைக்குப் பிரவேசித்தவராவார். விக்கும் அதுல களுஆரச்சி அவர்களின் 33 வருடகால சேவையில் 27 வருடங்களாக ...

Read More »

ஆளுமையுடைய அமைச்சரவை வேண்டும் – விதுர விக்கிரம நாயக்க

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்மையான, புத்திசாலித்தனமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆளுமையுடைய  அமைச்சரவையை நியமிப்பதே ஒரே வழியாகும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க  தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதலில் தலைவர்களுக்கு தவறான ஆலோசனைகளை கொடுக்கும் நேர்மையற்ற ஆலோசகர்கள் அகற்றப்பட வேண்டும். தற்போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் பொதுமக்கள் எரிபொருள் விலை உயர்வால் மேலும் தாங்க முடியாத சுமைக்கு ஆளாகி உள்ளனர் என்றார். ...

Read More »