நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்மையான, புத்திசாலித்தனமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆளுமையுடைய அமைச்சரவையை நியமிப்பதே ஒரே வழியாகும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதலில் தலைவர்களுக்கு தவறான ஆலோசனைகளை கொடுக்கும் நேர்மையற்ற ஆலோசகர்கள் அகற்றப்பட வேண்டும்.
தற்போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் பொதுமக்கள் எரிபொருள் விலை உயர்வால் மேலும் தாங்க முடியாத சுமைக்கு ஆளாகி உள்ளனர் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சீன உரம் மற்றும் சரக்குகளை அனுமதித்த நபர்கள் அது தொடர்பான முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் அவர்கள் அக் கப்பல்களுக்கு இழப்பீட்டையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்