“(ஆஸ்திரேலியாவின்) இந்த உணர்வற்ற செயலை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இஇமபடுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள். இம்மக்கள் நிஜமான மனித உயிர்கள், வீடியோ கேம் அல்ல. அவர்களுக்கு உதவ வேண்டியது, ஆபத்தான சூழலுக்கு திருப்பி அனுப்பாமல் இருக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை. இந்த கொடூரமான கொள்கைகள் முடிவுக்கு வர வேண்டும்,” என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தமிழ் செயற்பாட்டாளர்
தமிழ் கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
தமிழர்கள் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறி வரும் நிலையில் இப்படியொரு பிரச்சார செயலை ஆஸ்திரேலியா இலங்கையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறித்து மனித உரிமை மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் மேலெழுந்துள்ளது.