நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை இன்று இடம்பெறவுள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், சிறைச்சாலை மற்றும் சிறிலங்கா காவல் துறையின் பாதுகாப்பின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Read More »செய்திமுரசு
ஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் – ஈழ-தமிழக உறவுகளும்!
கருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். ஒரு நாள் யாரோ ஒரு ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளில் குறிப்பெழுதியிருந்தார். அதற்குக் கருணாநிதி ‘ஏனப்பா வயதை மதித்தாவது எழுத வேண்டாமா?’ என்ற தொனிப்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். அதற்கு மேற்படி ஈழத்தமிழர் ‘நீங்கள் மட்டும் பார்வதியம்மாவின் வயதை மதித்தீர்களா?’ என்று கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்விக்கு கருணாநிதி எதிர்வினையாற்றவில்லை. ஈழத்தின் பெருங்கிழவியான பார்வதியம்மா பிறந்த ...
Read More »பூகோள அரசியல் மாற்றங்கள்: இலங்கை எதிர்கொள்ளும் சவால்!
ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்பது போல தான், முதன்மையான நாடு என்ற தகைமையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத இரண்டு நாடுகளும், முட்டி மோதத் தொடங்கியிருக்கின்றன. இந்த மோதலின் விளைவுகள் இலங்கை போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகள் என்பன இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தைச் செலுத்தக் ...
Read More »புலம் பெயர்ந்த மக்களுக்கு பிறப்பு, குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை!
புலம் பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுவதற்கான நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நகர கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஒபர் சிலோன் அமைப்பின் அனுசரணையுடன் குறித்த நடமாடும் சேவை ஆரம்பமாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையும்,நாளை திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் குறித்த சேவைகள் இடம் பெறும இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, ...
Read More »எழுத்தாளர் வி.எஸ் நைபால் காலமானார்!
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் வயோதிகம் காரணமாக காலமானார். கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபாலின் முழுப்பெயர் சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் ...
Read More »தலைவர் பிரபாகரனுக்கு மகிந்த ராஜபக்ச கடிதம் எழுதினாராம்!
சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2006 இல் ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஐந்து பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது!
5 அவுஸ்திரேலியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த ஐந்து பேரும் இனி அவுஸ்திரேலியா திரும்ப முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியக் குடியுரிமை உட்பட இரட்டைக் குடியுரிமை கொண்ட குறித்த ஐவரும் மத்திய கிழக்கில் தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த ஐந்து பேரும் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விழுமியங்களுக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) தெரிவித்துள்ளார். 20 – 30 வயதுகளில் இருக்கும் ஐந்து பேருடைய குடியுரிமையே இவ்வாறு ...
Read More »தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் நான் கூட்டு வைப்பதா இல்லையா?
வடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவருடன் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன் இப்போது அது தேவையில்லை. என வடமாகாண முதல மைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இக் கலந்துரையாடலையடுத்து இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களால், நீங்கள் தம்முடன் கூட்டு சேர்ந்து அடுத்த மாகாண ...
Read More »போலி சான்றிதழ் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 22 பேருக்கு நேர்ந்த கதி!
அவுஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழம், கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்று வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் அவுஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
Read More »கலங்கிய குட்டையின் நிலையில் தென்பகுதி அரசியல்!
கூட்டு அரசின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடையவுள்ள நிலையில், அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. அடுத்த தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்புக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேனவே தலைமை அமைச்சராக நியமிப்பாரெனவும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக ஆட்சியை அமைக்குமெனவும் பொது எதிரணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பொது எதிரணியினர் இவ்வாறு கூறிவருவது புதியதொரு விடயமெனக் கூறமுடியாது. வழக்கமானதொரு கருத்து வெளிப்பாடே அது. தமது எண்ணப்படி நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்தவர் முன்னாள் அரச தலைவர் மகிந்த ...
Read More »