கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பகர நிலைமைகள் மற்றும் மோதல்கள் குறித்த விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ...
Read More »செய்திமுரசு
புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை!
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற மூன்று காரணிகளின் விளைவாக புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. முதலாவது காரணி கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கு ( அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் நிபுணர்களின் அறிக்கை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவும் காட்டுகின்ற எதிர்ப்பு. ராஜபக்ச மாத்திரமே இதுவரையில் தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டி கருத்து வெளியிட்டிருக்கிறார். சிறிசேனவும் ராஜபக்சவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
Read More »மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள்!
மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாம் அரச தலைவர்களுக்கு அறிவித்திருந்தோம் எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். பழைய முறைமையில் தேர்தலை நடத்த செய்யவேண்டிய சிறிய திருத்த வரைபையும் நாமே வரைந்தும் கொடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழ் தேசிய ...
Read More »புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய அனைவரும் தயாராக வேண்டும்!-ரஞ்சித் மத்தும பண்டார
அனைரும் புதிய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டுமென அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்கு அமைவாக கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சகலவித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் இந்த வருடத்தில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். ஆறு மாகாணசபைகளுக்கான கால எல்லை நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நிறைவடையவுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ...
Read More »டிரம்ப் – கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் ஏமாற்றம்
ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதல் சுற்றில் அமெரிக்க வீரரிடம் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். கிராண்ட் சிலாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொண்டார். இதில் முதல் சுற்றை பிரஜ்னேஷ் சிறப்பாக விளையாடி கைப்பற்றினார். ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை 3-6, 3-6 என இழந்தார். இதனால் 1-2 எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
Read More »‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா?
இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது. புகைப்படம் என்பது நமது ஞாபகங்களை உறைய வைக்கும் ஒரு அற்புதமான அதிசயம். பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதில் மூழ்கி கடந்த காலத்திற்கு சென்று விடுவதுண்டு. அந்த காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக தொங்க விடப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் பல கதைகளைச் சொல்லும். பின்னாட்களில், போட்டோ ஸ்டுடியோவிற்கு குடும்ப சகிதமாக சென்று விறைப்பாக நின்று போஸ் ...
Read More »சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி
சீனாவில் ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இந்த நிலையில் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து 66 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். 2 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Read More »அவுஸ்திரேலியாவில் உயிருக்கு போராடும் மலைப்பாம்பு!
அவுஸ்திரேலியாவில், உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் நிறைந்த மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது பாம்பு பிடிப்பவர்களால் குறித்த மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்டில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உடல் முழுவதும் ஒட்டுண்ணிகள் நிறைந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. சிலந்திப்பேன் வகையைச் சார்ந்த உண்ணிகள் என்று அறியப்படும் சிறு பூச்சிகள் அதன் உடலின் மேல்தோலில் ஒட்டியிருந்தன. பாம்பை மீட்ட பாம்பு பிடிக்கும் நபர் அதனை காட்டுயிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவர்கள் அதன் உடலில் இருந்து 500க்கும் ...
Read More »அம்பாறையில் பலத்த மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில் இரவு வேளைகளில் இம்மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. வீதிகள் பலவற்றில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துகளுக்கும் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில், தம்பட்டை, தம்பிலுவில், பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ...
Read More »