செய்திமுரசு

மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு தங்கப் பதக்கம்..!

ரஷ்யாவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில், இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக அளவில் புகழ் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்,கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெற்ற 10-வது மாஸ்கோ மணல் சிற்பக்கலை போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மணல் சிற்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். “நம் உலகைச் சுற்றி” என்ற தலைப்பில், தங்கள் மணல் சிற்பங்களை கலைஞர்கள் ...

Read More »

மசிடோனியா நாட்டில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல்

மசிடோனியா நாட்டில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடான மசிடோனியாவில் அல்பேனியன் நாடு உருவானத்தில் இருந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் நிகோலா குருவ்ர்கியின் வி.எம்.ஆர்.ஓ. கட்சி, ஆட்சி முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோசியல் ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன்‌ஷயீவ் அல்பேனியா ஆதரவு பெற்ற கட்சியுடன் இணைந்து புதிய அரசு அமைக்க முயன்று வருகிறார். இதற்கிடையே மசிடோனியா பாராளுமன்றத்தில் அல்பேனியன் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ...

Read More »

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன்

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று(28) காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தொழில்நுட்ப பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னணியில் இருந்தார். வாக்குப் பதிவின் நிறைவில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா போராசிரியர் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் இடங்களில் நிற்க மூன்றாவது இடத்துக்கான தெரிவு சமநிலையில் இருந்ததனால் மறு வாக்குப் பதிவின் ...

Read More »

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், அதிக மெருகுடன் உருவாக்கப்ட்டு வருகின்றன. இவற்றினை பெண்கள் தினம் தலையலங்காரத்தில் எனவும், விசேஷங்கள் ...

Read More »

அவுஸ்ரேலியாவிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தல்

அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா சென்றிருந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். “சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழம் நோக்கி பறக்கும் பறவைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வட்டிமடு பிரதேசங்களில் குறித்த பறவைகளை காணக்கூடியதாக உள்ளது. இந்த வெளிநாட்டுப் பறவைகள் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தினால் குறித்த பறவைகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பறவைகளை காணும்போது மிகவும் அழகாக இருப்பதாகவும், கூட்டம் கூட்டமாக வருவதாகவும், நீர் நிலைகளில் அதிகம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More »

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு?

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை நண்பரும் தமிழரசுக்கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் கருத்து வெளியிடுகையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையினில், கிளிநொச்சியினில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் போனோரது பாதுகாவலர்களது போராட்டத்திற்கு சென்றிருந்த மாவை சேனாதிராசா இத்தகைய போராட்டங்கள் நல்லாட்சி அரசிற்கு நெருக்குதல்களை வழங்கி மஹிந்த ஆட்சிபீடமேற வழிகோலிவிடுமென தெரிவித்திருந்தார். இக்கருத்து பற்றி ஊடகவியலாளர் ...

Read More »

தனியாக அவுஸ்ரேலியாவை கடக்க முயன்ற 12 வயது சிறுவன்

அவுஸ்ரேலியாவில் 12 வயது சிறுவன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து மேற்கு அவுஸ்ரேவின் பேர்த் நகருக்கு தனியாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். சிறுவன் ஆயிரத்து 1300 கிலோ மீற்றர் வரை பயணம் செய்திருந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் புரோகன் ஹில் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்த காவல் துறை புரோகன் ஹில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன் அப்போது நியூ சவுத் வேல்ஸின் கென்டால் பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவில் பல முக்கியமான விவசாய பண்ணைகளளை கடந்து நெடுஞ்சாலை வழியாக ...

Read More »

இலவச சட்ட ஆலோசனை மையம்

சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம், ஆனால் எல்லோருக்கும் தங்களுக்கான நீதியினை பெற்றுக்கொள்ள வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க போதுமான நிதி வசதி இருப்பது இல்லை. ஆகவே இப்படியானவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய அவுஸ்ரேலியாவில் எட்டு Legal Aid ஆணையங்கள் உள்ளன. அவுஸ்ரேலியாவிற்கு புதிதாக வந்த பாதிக்கப்பட்ட பின்தங்கியவர்களுக்கு உதவுவதே Legal Aid ஆணையங்களின் நோக்கமாகும். காங்கோ ஜனநாயக குடியரசுநாட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா வந்த மாணவர் Claude Muco.தனது நாட்டில் நிலவும் இன வன்முறை காரணமாக அங்கு திரும்பி செல்ல Claude பயப்படுகிறார். ஆனால் அவுஸ்ரேலியா ...

Read More »

முதன்முறையாக அவுஸ்ரேலியாவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி

இந்தியாவில் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதன்முறையாக அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களை அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. குளுமைப் பிரதேசமாக அறியப்படும் அவுஸ்ரேலியா நாட்டுக்கு மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மாம்பழ சாகுபடியில் படிப்படியாக முன்னேறிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்குப் போக மிஞ்சியுள்ள மாம்பழங்களை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், நமது நாட்டில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்களை முதன்முறையாக அல்போன்ஸா, ...

Read More »