இலவச சட்ட ஆலோசனை மையம்

சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம், ஆனால் எல்லோருக்கும் தங்களுக்கான நீதியினை பெற்றுக்கொள்ள வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க போதுமான நிதி வசதி இருப்பது இல்லை. ஆகவே இப்படியானவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய அவுஸ்ரேலியாவில் எட்டு Legal Aid ஆணையங்கள் உள்ளன.

அவுஸ்ரேலியாவிற்கு புதிதாக வந்த பாதிக்கப்பட்ட பின்தங்கியவர்களுக்கு உதவுவதே Legal Aid ஆணையங்களின் நோக்கமாகும்.

காங்கோ ஜனநாயக குடியரசுநாட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா வந்த மாணவர் Claude Muco.தனது நாட்டில் நிலவும் இன வன்முறை காரணமாக அங்கு திரும்பி செல்ல Claude பயப்படுகிறார். ஆனால் அவுஸ்ரேலியா தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ள எப்படி விண்ணப்பிப்பது என்று அவர் அறிந்திருக்க வில்லை அதற்கான சட்ட ஆலோசனை பெறவும் அவரிடம் போதுமான நிதி வசதி இல்லை.

இந்த சூழலில் சிட்னி புறநகரான Newtownல் உள்ள அகதிகள் மையத்திற்கு Claude சென்றபோது அவருக்கு Legal Aid பற்றி சொல்லப்பட்டுள்ளது. இது அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்துள்ளது.

Claudeவிற்கு கிடைத்தது போன்ற சட்ட ஆலோசனை புதிதாக நாட்டிற்கு வரும் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறுகிறார் Legal Aid NSW Refugee Serviceன் மூத்த வழக்கறிஞர்Jeremie Quiohilag

குடிவரவு விடயங்களை தவிர வீதி விதிமுறை மீறல் அபராதம், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் வாடகை முரண்பாடுகள், நுகர்வோர் முறைப்பாடு ஒன்றை எப்படி சமர்ப்பிப்பது அல்லது குடும்ப பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது போன்ற பல்வேறு விடயங்களுக்கும் Legal Aid ஆணையகத்தில் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

சிவில் வழக்குகள் மட்டும் அல்ல கிரிமினல் வழக்குகளுக்கும் Legal Aid உதவி பெற்றுக்கொள்ளலாம்.

1920ல் உருவாக்கப்பட்ட Legal Aid ஆணையம் 1970ல் Whitlam அரசாங்கத்தில் விரிவடைந்தது. பின்னர் வந்த அரசாங்கங்கள் Legal Aid ஆணையங்களை ஒவ்வொரு மாநில மற்றும் பிராந்தியங்களில் நிறுவியது.

நம் நாட்டின் Legal Aidதிட்டம் உலகின் சிறந்த ஒன்றாகும் என்கிறார் Melbourneன் மேற்கு புறநகரங்களில் உள்ள சட்ட ஆலோசனை மையமான WestJusticeன் நிர்வாக இயக்குனர் திருDenis Nelthorpe

உங்கள் மாநில மற்றும் பிராந்தியங்களில் உள்ள Legal Aid ஆணையங்களை பற்றி தெரிந்துக்கொள்ள http://www.australia.gov.au/content/legal-aidஎன்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்.