ரஷ்யாவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில், இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக அளவில் புகழ் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்,கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெற்ற 10-வது மாஸ்கோ மணல் சிற்பக்கலை போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மணல் சிற்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். “நம் உலகைச் சுற்றி” என்ற தலைப்பில், தங்கள் மணல் சிற்பங்களை கலைஞர்கள் உருவாக்கியிருந்தனர். இதில் இயற்கை விழிப்புணர்வு குறித்து மணல் சிற்பம் உருவாக்கியிருந்த சுதர்சன் பட்நாயக் முதல் பரிசை பெற்றார். தங்கப்பதக்கம் பெற்ற சுதர்சன் பட்நாயக்கை, ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ பங்கஜ் சரண், நேரில் அழைத்து பாராட்டினார்.