கடந்த 15ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய்யென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது. எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அதே ...
Read More »செய்திமுரசு
குடியுரிமைச் சட்ட மாற்றம்: எதிர்க்கும் அவுஸ்திரேலிய மனித உரிமை
அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவிற்கு, செனற் அவை அங்கீகாரம் வழங்கக்கூடாதென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு இந்த சட்டமானது பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. அதனால் அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்திரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றியமைக்கப்படுகிறது. ஒருவர் ...
Read More »விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியவர் விளக்கமறியலில்!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வழக்கில் அவர் பிணை வழங்க கோரிக்கை விடுத்திருக்கவில்லை. எனினும் அவர் எதிர்வரும் 31ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து ...
Read More »கடற்படை மீதான போர்குற்றங்களை மறுக்கின்றேன்! -கடற்படை தளபதி
இலங்கை கடற்படை மீதான போர்க்குற்றங்களை நான் மறுக்கின்றேன். எனினும் கடற்படை சீருடையில் குற்றங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவர்களை தண்டிப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்தார். நான் ஒரு அமெரிக்க உளவாளி அல்ல. இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய கடற்படை தளபதியாக கடமை பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று கடற்படை தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், கடற்படையில் ...
Read More »அவுஸ்ரேலியா வாங்கடா பாக்கலாம்!- ஷகிப் அல் ஹசன்
அவுஸ்ரேலியா அணியாக இருந்தாலும், எங்க ஊருக்கு வந்தா பயப்பட்டு தான் ஆகனும் என வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். வங்கதேசம் வந்துள்ள அவுஸ்ரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வருகை குறித்து அந்நாட்டு ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். ஷகிப் அல் ஹசன் கெத்து : அவுஸ்ரேலியா முன்னணி அணியாக இருந்தாலும், எங்கள் ஊருல நாங்க தான் கில்லி. எந்த ஒரு அணியாக இருந்தாலும் எங்கள் சொந்த மண்ணில் எங்களை எதிர்த்து விளையாடுவது ...
Read More »அமெரிக்கப் போர்க்கப்பலை தேடும் அவுஸ்ரேலியா!
விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் காணாமற்போன மாலுமிகளைத் தேடி மீட்கும் பணிகளுக்கான தேடல் பகுதி விரிவுபடுத்தப்படுள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. தேடல் பகுதி 2.620 சதுர கிலோமீட்டரிலிருந்து 5,524 சதுர கிலோமீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேடல் பணிகளில் அவுஸ்ரேலியாவும் சேர்ந்து கொண்டுள்ளது. முக்கிய தேடல் பகுதியில் சிங்கப்பூர், அமெரிக்கா ஆகியவை தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மலேசியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகியவை அதைச் சுற்றிய பகுதிகளில் தேடல் பணிகளை நடத்தி வருகின்றன. வர்த்தகக் கப்பலுடன் விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் 10 பேர் காணாமற்போயினர், ஐவர் ...
Read More »அவுஸ்ரேலியாவில் மதுபான விடுதியில் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுப்பு
அவுஸ்ரேலியா பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. டென்மார்க் இளவரசர் பிராடெரிக். இவர் பிரிஸ் பேன் நகரில் படகு விடும் விழாவில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு அவர் சென்றார். ஆனால் அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. மது அருந்திவிட்டு இரவு வாகனம் ஓட்டுபவர்களால் அங்கு அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே ...
Read More »வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மீள உருவாக்குவதில் சிக்கல்!
வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மீள உருவாக்குவது மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அமைச்சர்களை நியமிப்பதில் காட்டும் தேர்வு முறைமை கட்சிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்துவதால் தெளிவான ஓர் அமைச்சரவை அமைவது இன்னமும் முடிவாக வில்லை. முதன் முதலில் தான் அமைத்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டுப் புதிதாக ஒன்றை அமைக்க முதலமைச்சர் விரும்பினார். முதல் அமைச்சரவையில் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்த இரு அமைச்சர்கள், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் சிக்கிக்கொண்டு பதவி விலகவேண்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்தார். ஆனால், ...
Read More »2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் அவுஸ்ரேலியா களமிறங்கும்?
பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரில், 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன், அவுஸ்திரேலிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகறது. இந்திய உபகண்டத்தில், 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரொன்றை வென்றிருக்காத அவுஸ்ரேலியா, ஓரளவு அழுத்தங்களுடனேயே போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமன், பங்களாதேஷ் அணியில் சிறப்பான துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுவதாகவும், தமது சொந்த நாட்டில், சிறப்பான பெறுபேறுகளைக் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான அண்மைய தொடரில், பங்களாதேஷ் அணி, சிறப்பான பெறுபேற்றை ...
Read More »வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – முறைப்பாடுகளைத் தெரிவிக்க இலக்கங்கள்!
2017 ஆம் ஆண்டுக்கான வருடத்திற்கான வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் நடவடிக்கைகளின் ஆரம்பப் பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், அதற்குரிய ஆவணங்கள் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை, மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், கிராம அலுவலர் காரியாலயங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் பெயர் பட்டியலில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பிலான எதிர்புக்களைத் தெரிவிக்க, எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெயர் பட்டியலில் தமது பெயர்கள் இடம்பெறாதவர்களும் இந்தச் ...
Read More »