அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
வழக்கில் அவர் பிணை வழங்க கோரிக்கை விடுத்திருக்கவில்லை. எனினும் அவர் எதிர்வரும் 31ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் சென்ற இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த விமானம் மீண்டும் மெல்போர்னில் தரையிறக்கப்பட்டது.
பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்பட்டதால் இலங்கை பயணியை மெல்போர்ன் பொலிசார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal