ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து ஒளிப்படம் எடுத்துகொண்டனர். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது. அப்போது, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். ...
Read More »செய்திமுரசு
காத்தான்குடியிலிருந்து பெருந்திரளான வெடிபொருட்கள் மீட்பு!
மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் ஐ.எஸ் ஐ.எஸ். பயங்ரவாதிகளின் மட்டக்களப்பு ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்நைட் குச்சிகள், டெடனைடர்கள் உட்பட பெரும் திரளான வெடிபொருட்கள் இன்று வியாழக்கிழமை மாலை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது ...
Read More »ஜா-எல, ஏக்கல பள்ளி வாசலை அகற்றுக!
சிறிலங்காவில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைஆமையைக் கருத்திற் கொண்டு, ஜாஎல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிஆவாசலை உடன் அங்கிஆருந்து அகற்றுஆமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தெளஹீத் ஜமா அத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. ஜாஎல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கஆரஆவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறும் குறித்த ...
Read More »அவுஸ்திரேலியா- தீவிபத்து! இரட்டை சகோதாரிகள் உட்பட 3 பேர் பலி!
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவியமையினால் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு ஐந்து வயதான சகோதரிகள் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். இந்த தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களில் இருவர் இரட்டை சகோதரிகள் என தெரியவந்துள்ளது. அதேநேரம் தீப்பரவலில் காயமடைந்த நிலையில் 8 வயதான சிறுமி ஒருவரும் 31 வயதான பெண் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் ...
Read More »இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு!
ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன. சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக ...
Read More »சிரேஷ்ட ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார். வீரகேசரி பத்திரிகையில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த இவர், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதுடன் 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார். அத்துடன் தினபதி,சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ள இவரது சேவையைப் பாராட்டி, இலங்கைப் பத்திரிகைப் பேரவை “ வாழ்நாள் சாதனையாளர்“ விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More »கன்னியாவில் பௌத்த போதி அமைக்க நிலம் கோரியுள்ள விகாராதிபதி!
கன்னியாவில் பௌத்த போதி அமைத்து மீண்டும் அந்தப் பகுதியை கையகப்படுத்த கன்னியா விகாராதிபதி மீண்டும் முயற்சி எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்குரிய ஏற்பாடாக காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று கன்னியாவில் இடம்பெறவுள்ளதாகவும் இது தொடர்பாக கன்னியா தென்கயிலை ஆதீனம், தமிழர் சமூகம், ராவண சேனை, கன்னியா ஆலய நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. வரலாற்றுப் புகழ்கொண்ட கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் புத்தபோதி ஒன்றை அமைப்பதற்கு நான்கு ஏக்கர் காணியை ஒதுக்கித்தரும்படி சுடுநீர்க் ...
Read More »இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்!
“நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்? அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்? ‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் மூலமாகத்தான் தேடிக் கொள்கின்றான்’ என்கிறார் ரேபியா ...
Read More »ஈரான் மீதான தாக்குதல் ரத்து!
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஈரானில் அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் அவர் உடனடியாக தனது உத்தரவை திரும்ப ...
Read More »பாலியல் வல்லுறவை காரணம் காண்பித்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் பெண்கள்!
நவுறு தீவிலுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை காரணம் காண்பித்து அவுதிரேலியாவுக்கு வருவதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Peter Dutton இதனை தெரிவித்துள்ளார். மனுஸ் மற்றும் நவுறு தீவிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு வகை செய்யும் சட்டத்தை மாற்றுவதற்காக லிபரல் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட Peter Dutton, இதனை குறிப்பிட்டுள்ளார். “மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு வரமுடியும் என்ற சட்டம் நடைமுறையிலிருக்கும்வரையில் அந்த சட்டத்திற்குள்ளேயும் அதைச்சுற்றியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மனுஸ் – நவுறு ...
Read More »