ஈரான் மீதான தாக்குதல் ரத்து!

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஈரானில் அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் உடனடியாக தனது உத்தரவை திரும்ப பெற்றார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.