சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் கொரோனா வைரசுக்கு அதிக மக்கள் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் மொத்தம் 7375 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3119 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 80700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். சீனாவுக்கு வெளியே கொரோனா ...
Read More »செய்திமுரசு
நிரம்பி வழிந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்!
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும். மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் ...
Read More »இனியும் ‘உக்கிய’ முடிவுதானா?
அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தமது அரசியல் நலன்கள் சார்ந்தும், தங்களது இருப்பின் மீதான வலுவை ...
Read More »தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்கள் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தாம் ஊழலுக்கு எதிரான அர்ப்பணிப்புள்ளவர் என்பதையும் மிக வெளிப்படைத் தன்மை , பொறுப்புக் கூறுபவர் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை பொது ...
Read More »இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும்!
வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் நேற்று பிற்பகல் வடமராட்சி, கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு மக்களுடன் இடம் பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வட கிழக்கு மக்களிடையே அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களை சமாந்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஸ்டி ...
Read More »வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில்(08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது . இறுதிப்போரின் காலப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் தமது பிள்ளைகளை ;கையளித்து ,சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு செல்வபுரம் மில்லடி பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது ஐக்கியநாடுகள் சபையின் 43ஆவது மனிதஉரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் தருணத்தில் ...
Read More »டி 20 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணி சாம்பியன்!
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக ...
Read More »புற்றுநோய் பாதித்த 7 வயது இந்தியச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் இளவரசர்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது இந்தியச் சிறுவனின் நெடுநாள் ஆசையை துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நிறைவேற்றி வைத்துள்ளார். இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபத்தை சேர்ந்த முஹம்மது தஜாமுல் ஹுசைன் என்பவர் துபாயில் தொழில் செய்தவாறு தனது மனைவி, பிள்ளைகளுடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார். இவரது 7 வயது மகன் அப்துல்லாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கழுத்தில் தோன்றிய ஒரு கட்டி, நாளுக்குநாள் வேகமாக வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போனது. மருத்துவர்கள் நடத்திய ’பயாப்சி’ பரிசோதனையில் அது புற்றுக்கட்டி ...
Read More »இலங்கை – அவுஸ்திரேலிய லெஜன்ட் அணிகளுக்கிடையேயான ஆட்டம் இன்று!
வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் ஆட்டத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. ஐந்து அணிகள் பங்குபெறும் வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது நேற்று ஆரம்பமானது. மொத்தமாக 11 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ள இத் தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 22 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் லெஜன்ட் அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ...
Read More »’100 நாள்களில் திருப்தி இல்லை’!
ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா தீர்மானம், அரசியல் கைதிகள், பட்டதாரிகள் விவகாரம், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றையதினம் பதிலளித்தார். ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் ஆணையையேற்றுப் பதவியில் இருக்கின்றபோதிலும் பலமான ...
Read More »