வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் ஆட்டத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
ஐந்து அணிகள் பங்குபெறும் வீதிப் பாதுகாப்பு இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது நேற்று ஆரம்பமானது. மொத்தமாக 11 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ள இத் தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 22 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் லெஜன்ட் அணிகள் மோதின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை குவித்தது.
151 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
இந் நிலையில் இத் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்றைய தினம் திலகரத்ன தில்ஷான் தலைமயிலன இலங்கை மற்றும் பிரட் லீ தலைமையிலான அவுஸ்திரேலிய லெஜன்ட் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
இப் போட்டியானது இன்றிரவு 7.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
14 பெயர்களை உள்ளடக்கிய இலங்கை அணி விபரம்:
திலகரத்ன தில்ஷான்
ரோமேஸ் களுவிதாரன
மார்வன் அத்தபத்து
சாமர கபுகெதேர
மலிந்த வர்னபுர
பெளரீஸ் மெளரூப்
சசித்திர சேனாநாயக்க
உபுல் சந்தன
ரங்கனே ஹேரத்
சமிந்த வாஸ்
முத்தையா முரளிதரன்
துலஞ்சன விஜேசிங்க
அஜந்த மெண்டீஸ்
திலான் துஷார
Eelamurasu Australia Online News Portal