செய்திமுரசு

வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் புதிய வியூகம்!

ஆப்கானிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அன்றாடம் தேவையான பொருட்களை இணைய வழி மூலம் வாங்குகின்றனர். ஆப்கானிஸ்தானில் தினந்தோறும் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. குண்டு வெடிப்பு, தற்கொலை தாக்குதல்கள் அன்றாட வாடிக்கையாக உள்ளது. பெண்கள் வீதியில் நடந்து செல்ல முடியவில்லை. ‘பாலியல்’ தொல்லை தரப்படுகிறது. இத்தகைய காரணங்களால் வெளியில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது. இருந்தாலும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அதற்காக தற்போது ‘இணைய வழி’ வர்த்தகத்தை மக்கள் நாடுகின்றனர். அதன்மூலம் வீட்டு உபயோக பொருட்கள், ...

Read More »

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி போராட்டம்!

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முதன்மை வீதியிலுள்ள மீனவ சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம்,முதன்மை வீதியூடாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது. மாவட்டச் செயலரிடம் மீனவர்கள் மனுவைக் கையளித்தனர்.

Read More »

கோத்தபாய வேட்பாளராக நிறுத்தப்படுவாரா?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாவதற்கு கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு ஆதரவு தேவை என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியில் கோத்தாபாய ராஜபக்ச குறித்து காணப்படும் கருத்தை கணக்கிலெடுத்துள்ளதாகவும், தனக்கும் தனது சகோதரரிற்கும் இடையில் எந்தவித கருத்துமுரண்பாடுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் இருவர் மத்தியில் ...

Read More »

மன்னாரில் “மக்கள் காதர்” என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் காலமானார்!

நீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளரும் கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமானார். மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவர். ஜனாசா நல்லடக்கம் இன்று(10) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர்வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எழுத்தியல் நாயகன், மக்கள் காதர் இன மத சமூக வேறுபாடுகளைக் களைந்து ஊடகத்துறையிலும், ...

Read More »

வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் சென்றார்!

அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் சென்றடைந்தார். வருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் ...

Read More »

மிதிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியஅரசு 85 கோடி ரூபாய் நிதியுதவி!

இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிதியினால் வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு தேவையான பொருளாதார உதவியை வழங்குவதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு அதிகமாக ஆதரவை வழங்கிவரும் நாடாக அவுஸ்திரேலியா காணப்படுவதுடன், 2009ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.

Read More »

மீண்டும் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரன்!

தமிழ் மக்கள் பேரவை அடுத்த மாகாண சபை தேர்தலில் தனது ஆதரவு வேட்பாளரை களமிறக்கலாமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பூடகமாக கருத்து தெரிவித்துள்ளார். பேரவை சார்பில் ஒருவரையும் வேட்பானராக நியமிக்க மாட்டோம். ஆனால் பேரவையின் அனுசரணையில் யாராவது முதலமைச்சர் வேட்பாளராக வரக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான முன்னே ற்றம் இடம்பெறுவதாக கூறப்படுகின்றதேயென்ற கேள்விக்கு பதிலளித்து அவர் முன்னேற்றம் ஒன்று நடைபெற் றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது கட்சி ரீதியானது என நான் பார்க்கவில்லையென தெரிவித்திருந்தார். ...

Read More »

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும்  சிறிலங்காவினால்  முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்நகர்வுகள் பாராட்டுக்குரியவை. எனினும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல், மக்களின் காணிகளை விரைவாக விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை துரிதமான நடவடிக்கைகளை சிறிலங்கா  முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையின் இணை ஆணைக்குழு என்பவற்றின் கீழ் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற குடும்ப தகராறின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி Carlingford பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சிறுவன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்படுவதை அவனது பாட்டி தடுக்க முற்பட்டுள்ளார். இருப்பினும் எவ்வித பயனும் இன்றி படுகாயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது ...

Read More »

டிரம்ப்புடனான சந்திப்பில்நான் கொல்லப்படலாம்! -கிம்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் திகதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள். இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் ...

Read More »