கோத்தபாய வேட்பாளராக நிறுத்தப்படுவாரா?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாவதற்கு கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு ஆதரவு தேவை என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் கோத்தாபாய ராஜபக்ச குறித்து காணப்படும் கருத்தை கணக்கிலெடுத்துள்ளதாகவும், தனக்கும் தனது சகோதரரிற்கும் இடையில் எந்தவித கருத்துமுரண்பாடுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் இருவர் மத்தியில் அதிகாரப்போட்டியெதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் முன்னர் குடும்ப ஆட்சி குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களே தற்போது இந்த கருத்தை பரப்புவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியில் வெறுமனே ராஜபக்சாக்கள் மாத்திரம் இல்லை அரசாங்கத்தில் இல்லாத சிறந்த அரசியல்வாதிகள் எம்முடன் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.