தமிழ் மக்கள் பேரவை அடுத்த மாகாண சபை தேர்தலில் தனது ஆதரவு வேட்பாளரை களமிறக்கலாமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பூடகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பேரவை சார்பில் ஒருவரையும் வேட்பானராக நியமிக்க மாட்டோம். ஆனால் பேரவையின் அனுசரணையில் யாராவது முதலமைச்சர் வேட்பாளராக வரக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான முன்னே ற்றம் இடம்பெறுவதாக கூறப்படுகின்றதேயென்ற கேள்விக்கு பதிலளித்து அவர் முன்னேற்றம் ஒன்று நடைபெற் றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது கட்சி ரீதியானது என நான் பார்க்கவில்லையென தெரிவித்திருந்தார்.
அடுத்த மாகாண சபை தேர்த லில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர் இல்லையென தலையாட்டியதுடன் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையின் தேர்தலில் போட்டியிடுவேன் என்பது அதற்கு மூன்று மாத காலத்திற்கு முன்பு தான் தெரியும். எனவே அது அது அந் தந்த நேரத்தில் நடந்துள்ளது.இனியும் நடக்குமென முதலiமைச்சர் அர்த்தமுள்ள சிரிப்பொன்றுடன் தெரிவித்தார்.
தற்போது இது தொடர்பாக உறுதியாக எதனையும் கூற முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நேரத்தில் உரிய பதிலை தெளிவாக கூறுவேன் என்றார்.