செய்திமுரசு

ஆஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரில் இன்று காலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Read More »

மக்கள் பணத்தை மடிக்குள் புதைத்த மாநகரசபை முதல்வர்!

யாழ் மாநகரசபை முதல்வரின் பிரத்தியோகப் பாவனைக்கு என யாழ் மாநகரசபை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மடிக் கணனியின் பெறுமதி 6 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா என கண்டறியப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையிலேயே யாழ் மாநகரசபையினால் குறித்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரத்தியோகமாக தொழில்முறை சார்ந்து பயிற்றுவிக்கப்பட்ட வீடியோ படத் தொகுப்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய வசதிகளை உள்ளடக்கிய மிக அதிக பெறுமதிவாய்ந்த குறித்த Apple ; MR924PA/A மடிக்கணனி சாதாரண அலுவலக தேவைக்கு பயன்படுத்துவதற்காக யாழ் மாநகர முதல்வரினால் ...

Read More »

மனிதர்களிடம் உதவி கோரிய ஒரு மீன்!

தனது கண்ணுக்குக் கீழ் சிக்கிக் கொண்ட கொக்கிகளை அகற்ற, மீன் ஒன்று மனிதர்களிடம் உதவி கோரும் அபூர்வ வீடியோ ஒன்று வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Ningaloo வளைகுடாவுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்லும் Jake Wilton, தண்ணீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரும் கூட. அப்படி அவர் தண்ணிருக்குள் செல்லும்போது manta ray என்னும் ஒருவகை மீன் ஒன்று மீண்டும் மீண்டும் அவரருகே வந்திருக்கிறது. வழக்கமாக அப்பகுதியில் புகைப்படம் எடுப்பவர் என்பதால், Wiltonக்கு அந்த மீன் அவருக்கு பழக்கமான Freckles என்ற பெயர் கொண்ட மீன் ...

Read More »

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி ஆலோசகராக இந்தியரான அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளின் பல்வேறு திட்டங்களுக்கு கடன் அளித்து நிதியுதவி செய்யும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று வெளியிட்டார். தற்போது ஸ்டேட் பேங்க் ...

Read More »

டியூ குணசேகர !அவர் ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்!

நீண்டகாலம் சேவை செய்த அரசியல் தலைவராக டியூ.குணசேகர விளங்குகிறார். சரியாகச் சொல்லப்போனால் 60 வருடங்கள். டட்லி சேனாநாயக்க 31 வருடங்கள் சேவை செய்தார் ஜே.ஆர்.ஜயவர்தன 50 வருடங்கள் ;  சிறிமாவோ பண்டாரநாயக்க 40 வருடங்கள் ;  கலாநிதி என்.எம்.பெரேரா 46 வருடங்கள் ;  கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா 56 வருடங்கள் ; கலாநிதி எஸ்.ஏ.விக்ரமசிங்க 50 வருடங்கள் ; பீட்டர் கெனமன் 57 வருடங்கள். நோர்வேயைச் சேர்ந்த சிறந்த நண்பரொருவர் டி.யூவுடன் குறுகிய நேரம் சந்தித்துப் பேசிவிட்டு அவர் எத்தகைய பண்பு கொண்டவர் என்று ...

Read More »

ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால்  குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்ற நபரே மகரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சஹ்ரானின் மனைவி தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கலாம்!

குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என   நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார். நேற்று மாலை இடம்பெற்ற மாதர்களுக்கான  மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி கபூர் தலைமையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இஸ்லாம் என்பது மனித உரிமையை அங்கீகரித்த ஒரு மார்க்கம்.ஒரு மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் அவசியமோ ...

Read More »

டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர், வலுவான தலைவர் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் பெரும்பாலானோர் அவரது நேர்மை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி ...

Read More »

பெண் பத்திரிகையாளரே இலங்கையிலிருந்து வெளியேறுக!

டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா  கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு  உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர்  பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார் வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ...

Read More »

வத்தளையில் தமிழ் பாடசாலை! – இன்று அடிக்கல் நாட்டு விழா!

வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறுகின்றது. இது தொடர்பான நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். முதலாம் தரத்தில் இருந்து வத்தளையில் செயற்படும் தமிழ் மொழிமூல ஒரு தேசிய பாடசாலையாக இப்பாடசாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடசாலைக்காக 4 மாடி கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த மதிப்பீட்டு தொகையாக சுமார் 8 கோடி ரூபாவாக மதிப்பிடிப்பட்டுள்ளதுடன் முதற்கட்ட ஒதுக்கீடாக 3 ...

Read More »